இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் திரிபுகள்! ஆபத்தா? விஞ்ஞானிகள் விளக்கம்
டெல்லி: இந்தியாவில் NB.1.8.1 மற்றும் LF.7 என புதிய வகை கொரோனா வைரஸ் திரிபுகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இதனால் பாதிக்கப்படுபவர்கள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், இது ஆபத்தானதா? என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் NB.1.8.1 வகை கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டது. அதேபோல இந்த மாதம் குஜராத்தில் LF.7 கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் உலகின் பல இடங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆசிய நாடுகளில் இந்த தாக்கம் திடீரென உயர்ந்திருக்கிறது. இந்தியாவிலும் புதிய தொற்று பரவல் தொடங்கியுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைரஸின் இரண்டு புதிய வகைகள் இந்தியாவில் உருவாகியுள்ளதாக, இந்தியாவின் COVID-19 வைரஸ் மரபணு கண்காணிப்பு கூட்டமைப்பு (INSACOG) தெரிவித்திருக்கிறது.
இந்தியாவின் வைரஸ் பரவல் குறித்து உலக சுகாதார மையமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த மாதம் சுகாதார மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "LF.7 மற்றும் NB.1.8 என்பது ஏற்கெனவே உள்ள கொரோனா வைரஸின் துணை பிரிவுகள்தான். இது ஆபத்தானதாகவோ, கவலைக்குரியதாகவோ நினைத்து அச்சப்பட வேண்டியதில்லை. ஆனால் இது கண்காணிப்புக்கு உரியதாகும். NB.1.8.1 ஆல் ஏற்படும் ஆபத்துகள் சர்வதேச அளவில் குறைவாகவே இருக்கின்றன.
தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களை கொண்டு பார்க்கும்போது, நாம் பயன்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகளே இந்த வகை திரிபு வைரஸ்களுக்கு எதிராக உறுதியாக வேலை செய்யும்" என்று தெரிவித்திருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை அதிகம் பதிவு செய்யப்பட்ட கேஸ்கள், JN.1 வகை திரிபால் பாதிக்கப்பட்டவர்கள்தான். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 53% பேர் இந்த திரிபால்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கடுத்து BA.2 திரிபு கொரோனா வைரஸால் 26% பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஓமிக்ரான் திரிபு வைரஸ்களால் 20% பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இப்போது இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதற்கு காரணம் JN.1 திரிபு வைரஸ்தான். எனவே அச்சமடைய தேவையில்லை. வழக்கமாக மேற்கொள்ளப்படும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலே போதுமானதுதான். கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவுதல், மருத்துவமனைகள் அல்லது நெரிசலான இடங்களில் முககவசம் அணிதல், தொற்று பாதிப்பு அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுதல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்க ஜூனியர் டாக்டர்ஸ் நெட்வொர்க் அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் டாக்டர் துருவ் சவுகான் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications