"நாங்கள் பாதுகாப்பு தர முடியாது".. ஐடி விதியை பின்பற்றாத ட்விட்டர்.. விளாசிய டெல்லி ஹைகோர்ட்!
டெல்லி: மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை பின்பற்றவில்லை என்றால் ட்விட்டர் நிறுவனத்திற்கு சட்ட பாதுகாப்பு வழங்க முடியாது, அந்த நிறுவனத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் அதை தடுக்க மாட்டோம் என்று டெல்லி ஹைகோர்ட் கூறியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மத்திய தகவல்கள் தொழில்நுட்ப துறை மூலம் சமூக வலைத்தளங்களுக்கும், ஓடிடி தளங்களுக்கும் புதிய ஐடி விதிகள் கொண்டு வரப்பட்டன. இந்த ஐடி விதிகளை இன்னும் ட்விட்டர் நிறுவனம் பின்பற்றவில்லை. இந்த விதியின்படி இந்த சமூக வலைத்தளம் மற்றும் ஓடிடி தளங்கள் தங்களிடம் வரும் புகார்களை விசாரிப்பதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.
இந்தியாவில் இருக்கும் அனைத்து பெரிய சமூக வலைதளங்களுக்கும் குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். இதற்காக ட்விட்டர் நிறுவனம் இந்தியர் ஒருவரை இடைக்கால அதிகாரியாக நியமித்து இருந்தது. ஆனால் அதன்பின் இவர் நீக்கப்பட்டு கலிபோர்னியாவை சேர்ந்த ஜெர்மி கேசல் ட்விட்டர் இந்தியாவின் புதிய குறைதீர்ப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எப்படி
இதன் மூலம் மத்திய அரசின் விதியை மதிக்காமல் ட்விட்டர் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. ஐடி விதியை ட்விட்டர் நிறுவனம் பின்பற்றாத நிலையில், அந்த நிறுவனத்தின் சட்ட பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு டெல்லி ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிபதி ரேகா பள்ளி இன்று இந்த வழக்கை விசாரித்தார்.

விசாரணை
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வழக்கறிஞர் சேட்டன் சர்மா, மத்திய அரசின் ஐடி விதிகளை ட்விட்டர் நிறுவனம் மதிக்கவில்லை. கடந்த பிப்ரவரி 25ம் தேதி இந்த விதிகள் குறித்து ட்விட்டர் நிறுவனத்திற்கு தெரிவித்தோம். மூன்று மாதம் அவகாசம் கொடுத்து இருந்தோம். ஆனால் இன்னும் ட்விட்டர் நிறுவனம் இந்த விதிகளை மதிக்கவில்லை.

மோசம்
ட்விட்டர் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் கடந்த மே 25ம் தேதியோடு முடிந்துவிட்டது. 40 நாட்களுக்கும் மேலாக இவர்கள் இந்த விதியை மதிக்காமல் உள்ளனர். ஒரு இந்திய குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க ஏன் இவ்வளவு தாமதம் ஆகிறது. எத்தனை நாட்கள் இவர்கள் தொடர்ந்து தாமதப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இந்தியாவில் அவர்கள் தொழில் செய்யலாம்.

தொழில்
ஆனால் இந்தியாவிற்கு அவர்கள் வந்தால் இந்தியாவின் விதியை பின்பற்ற வேண்டும். இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக அவர்கள் செயல்பட முடியாது, என்று குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த ட்விட்டர் நிறுவனம், இந்தியாவின் விதிகளை நாங்கள் பின்பற்ற தயார். புதிய இந்திய குறைதீர்ப்பு அதிகாரியை நியமிப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.

ஆலோசனை
இன்னும் 8 வாரங்களில் இது தொடர்பாக முடிவு எடுப்போம். இதற்காக இந்தியாவில் அலுவலகம் ஒன்றை திறக்கும் முடிவிலும் இருக்கிறோம். அனைத்து ஐடி விதிகள் தொடர்பான குறைகளையும் தீர்க்கும் வகையில் இந்த அலுவலகம் அமைக்கப்படும். அதே சமயம் ஒரு சட்ட விதி தொடர்பான விவாதங்களை மேற்கொள்ளவும், சட்ட ரீதியான போராட்டங்களை மேற்கொள்ளவும் எங்களுக்கு முழு உரிமை உள்ளது என்று ட்விட்டர் நிறுவனம் குறிப்பிட்டது.

விமர்சனம்
இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை டெல்லி ஹைகோர்ட் நீதிபதி ரேகா கடுமையாக விமர்சனம் செய்தார், மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை பின்பற்றவில்லை என்றால் ட்விட்டர் நிறுவனத்திற்கு சட்ட பாதுகாப்பு வழங்க முடியாது, அந்த நிறுவனத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் அதை தடுக்க மாட்டோம். ட்விட்டர் நிறுவனத்தின் இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரி வெளியேறியது ஏன்? இதை பற்றி ஏன் நீதிமன்றத்தில் நீங்கள் அறிவிக்கவில்லை.

புதிய அதிகாரி
ஏன் புதிய இந்திய அதிகாரியை, குறைந்த பட்சம் இடைக்கால அதிகாரியை கூட நீங்கள் நியமிக்கவில்லை. கடந்த 15 நாட்களாக என்ன செய்தீர்கள். இன்னும் எத்தனை காலம் உங்களுக்கு அவகாசம் வேண்டும். இந்தியாவில் இருந்தால் நீங்கள் இந்தியாவின் விதியை பின்பற்ற வேண்டும், என்று கடுமையாக நீதிபதி விமர்சனம் செய்தார். இதையடுத்து ஐடி விதிகளை பின்பற்றுவது தொடர்பாக ஜூலை 11க்குள் அறிக்கை அளிப்போம் என்று ட்விட்டர் நிறுவனம் உறுதி அளித்தது. இதனால் வழக்கு விசாரணை ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications