புதிய தொழிலாளர் விதிகளால்.. உங்களின் மாத சம்பளம் எந்தளவுக்கு குறையும்? மிக முக்கியமான விளக்கம்
டெல்லி: மத்திய அரசு கடந்த மாதம் இறுதியில் புதிய தொழிலாளர் சட்ட விதிகளை அறிவித்திருந்தது. இதில் பல முக்கியமான ரூல்ஸ் இடம்பெற்று இருந்தது. தொழிலாளர்கள் நலனை உறுதி செய்யவே இந்த விதிகளைக் கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு கூறியது. அதேநேரம் இந்த புதிய ரூல்ஸால் ஒருவருக்கு கைக்குக் கிடைக்கும் சம்பளம் குறையலாம் எனத் தகவல் பரவியது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
மத்திய அரசு கடந்த நவம்பர் 21ம் தேதி புதிய தொழிலாளர் சட்ட விதிகளை அறிமுகப்படுத்தியது. அதில் ஏற்கனவே இருந்த பல விதிகள் மாற்றப்பட்டு இருந்தது. தொழிலாளர்கள் நலனை உறுதி செய்யும் விதமாகவே இந்த மாற்றங்களைச் செய்துள்ளதாக மத்திய அரசு கூறியிருந்தது. இதற்குப் பல்வேறு தரப்பினும் வரவேற்பு தெரிவித்தனர். அதேநேரம் இதில் இருக்கும் சிக்கல்களையும் சிலர் சுட்டிக்காட்டினர்.

சம்பளம் குறையும்?
மேலும், அப்போதே ஊழியர்களின் take home சம்பளம் குறையக்கூடும் என்று தகவல் பரவி வந்தது. புதிய தொழிலாளர் சட்ட விதிகளின்படி, அடிப்படைச் சம்பளம் என்பது மொத்தச் சம்பளத்தில் குறைந்தபட்சம் பாதியளவாவது இருக்க வேண்டும் என்ற ரூல்ஸ் இருக்கிறது. அதாவது அடிப்படைச் சம்பளம் அதிகரித்தால், வருங்கால வைப்பு நிதி பிடித்தும் உயரும். இதனால் கையில் வரும் சம்பளம் குறையும் என்று பலரும் நினைக்கிறார்கள். இதன் காரணமாகவே புதிய தொழிலாளர் சட்ட விதிகளின் கீழ் மாதச் சம்பளம் குறையும் என்கிறார்கள்.
இருப்பினும், இது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என்று மத்தியத் தொழிலாளர் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த புதிய விதிகளால் யாருடைய டேக் ஹோம் சம்பளமும் குறையாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வருங்கால வைப்பு நிதி கணக்கிடப்படும் முறைதான் இந்த அச்சத்திற்குக் காரணம் எனச் சொல்லியுள்ள அதிகாரிகள், இது தொடர்பாகவும் விளக்கமளித்துள்ளனர்.
விளக்கம்
புதிய விதிகளின் கீழ் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் சம்பளம் அதிகரித்தாலும், பிஎஃப் பங்களிப்பு ஏற்கனவே உள்ள ₹15,000 என்ற சட்டப்பூர்வ உச்ச வரம்பின் அடிப்படையிலேயே தொடர்ந்து கணக்கிடப்படும். ஊழியர் தானாகவே அதிகத் தொகையை பிடித்தம் செய்ய ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்படுவது உயரும். எனவே, இந்த உச்சவரம்பு என்பது முக்கியம். மேலும், புதிய சட்டத்தில் வருங்கால வைப்பு நிதியை முழு சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடும்படி எந்த விதியும் கட்டாயப்படுத்தவில்லை என்பதையும் தொழிலாளர் அமைச்சகம் எடுத்துக்காட்டியுள்ளது.
உதாரணம்
இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளத் தொழிலாளர் அமைச்சகம் மேலும் ஒரு விளக்கத்தை வழங்கியது. ஒருவர் மாதம் ₹60,000 சம்பளம் பெறுகிறார் என வைத்துக் கொள்வோம். அதில் அடிப்படை சம்பளமாக ₹20,000 மற்றும் அகவிலைப்படி உள்ளிட்ட அலவன்ஸ் அடிப்படையில் ₹40,000 இருக்கும். அவருக்கு பிடித்தம் போக இப்போது கைக்கு ரூ.56,400 சம்பளம் வரும்.
மத்திய அரசின் புதிய விதிகளின் கீழ் அடிப்படை சம்பளத்தில் மாற்றம் இருந்தாலும் பிஎஃப் உச்சவரம்பு விதி காரணமாக பிஎஃப் பிடித்தம் ₹15,000 என்ற அடிப்படையிலேயே கணக்கிடப்படும். இதனால் பிடித்தம் ரூ.1800ஆக மட்டுமே தொடரும். இதன் காரணமாக ஒருவரது டேக் ஹோம் சம்பளம் ₹56,400 ஆக மாறாமல் இருக்கும்.
நிம்மதி
அதாவது புதிய தொழிலாளர் சட்டத்தால் டேக் ஹோம் சம்பளம் எந்த விதத்திலும் குறையாது. ஊழியர்களுக்கு இந்த விளக்கம் நிம்மதியளித்துள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் புதிய தொழிலாளர் சட்டங்களால் சம்பளம் கட்டமைப்பு மாறுபடும், இருப்பினும், பிஎஃப் என்பது ஏற்கனவே உள்ள ₹15,000 என்ற சட்டப்பூர்வ உச்ச வரம்பின் அடிப்படையிலேயே தொடர்ந்து கணக்கிடப்படும். எனவே, கைக்குக் கிடைக்கும் சம்பளத்தில் மாற்றம் இருக்காது.
-
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications