Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைவிலங்கு போட்டு இந்தியர்கள் நாடு கடத்தல்.. உடனே ஆக்ஷனில் இறங்கிய மத்திய அரசு! மிக முக்கிய மாற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் இந்தியர்கள் வெளிநாடுகளில் எந்தவொரு சிக்கலையும் எதிர்கொள்வதில்லை என்றாலும் சில நேரங்களில் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதற்கிடையே மத்திய அரசு இது தொடர்பாக முக்கிய நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியர்கள் படிப்பு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளிநாட்டிற்குச் சென்று வருகிறார்கள். குறிப்பாகக் கடந்த சில ஆண்டுகளில் இதுபோல வெளிநாட்டிற்குச் செல்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

india usa

வெளிநாடுகளில் இந்தியர்கள்:

பெரும்பாலான இந்தியர்கள் உரியா விசா பெற்றே இதுபோல வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் சிலர் உரிய விசா இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். பொதுவாக அமெரிக்காவுக்கு விசா கிடைப்பது சிரமமாக உள்ள சூழலில், அங்கு தான் இதுபோல சட்டவிரோதமாக நுழைய முயல்கிறார்கள். அமெரிக்காவில் இதுபோல சுமார் 7 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், பல அதிரடி சட்டங்களைக் கொண்டு வருகிறார். அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் சிக்கலில் இருக்கவே சட்டவிரோத குடியேறிகள் தான் காரணம் என சொல்லும் டிரம்ப், அவர்களை வெளியேற்றப் போவதாகக் கூறி வந்தார். தேர்தலுக்கு முன்பே இதை வாக்குறுதியாக டிரம்ப் கூறி வந்த நிலையில், இப்போது அதிபராகப் பதவியேற்ற உடன் அதை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

வெடித்த சர்ச்சை:

சமீபத்தில் கூட அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 104 பேர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். கை, கால்களில் விலங்கிட்டு ராணுவ விமானத்தில் அவர்கள் நாடுகடத்தப்பட்ட விதம் பெரும் சர்ச்சையானது. இதற்கிடையே வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய நாட்டினருக்காக மத்திய அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டம்:

படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக இந்தியர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்குச் செல்லும் சூழலில், மத்திய அரசு இப்படியொரு சட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இது வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக இந்த சட்டம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் இருந்து மொத்தம் 104 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். அவர்களில் அதிகபட்சமாக 33 பேர் குஜராத் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதேபோல பஞ்சாபைச் சேர்ந்த 30 பேர், மகாராஷ்டிரா மற்றும் உபியை சேர்ந்த மூவர், சண்டிகரை சேர்ந்த இருவரும் நாடு கடத்தப்பட்டனர். இதில் 19 பேர் பெண்கள், 13 பேர் குழந்தைகள் ஆவர் குறிப்பாக 4.5 வயது ஆண் குழந்தையும், ஐந்து மற்றும் ஏழு வயது சிறுமிகளும் கூட நாடுகடத்தப்பட்டனர்.

மத்திய அரசு விளக்கம்:

இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குக் கைவிலங்கு எதுவும் போடப்படவில்லை. ஆனால், ஆண்கள் கைவிலங்கிடப்பட்டே அழைத்து வரப்பட்டனர். இதனால் கழிவறையைப் பயன்படுத்துவதில் கூட சிக்கல் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்த நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது குறித்த விளக்கத்தை அளித்திருந்தார். அமெரிக்காவின் சட்டப்படியே நாடு கடத்தப்படுவோரை இப்படி தான் அழைத்துச் செல்ல வேண்டும் என்று விதிமுறை இருப்பதாலேயே இதுபோல நடந்ததாகவும் வரும் காலங்களில் இதுபோல நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

எங்குப் பிடிக்கப்பட்டனர்:

தற்போது நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் அனைவரும் சட்டப்பூர்வமான முறையிலேயே இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளனர். ஆனால், அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயன்றனர் என்பதே புகாராகும். அவர்களில் பலரும் அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+