"மகாபாரதம்.. வேதங்கள்.." 6ம் வகுப்பிற்கான புதிய பாடப் புத்தகத்தை வெளியிட்ட என்சிஇஆர்டி அமைப்பு!
டெல்லி: என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் 6ஆம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. முன்பு வரலாறு, புவியியல் மற்றும் சிவிக்ஸ் என தனித்தனியாக 3 புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், இப்போது அவை அனைத்தும் சேர்ந்து ஒரே புத்தகமாக வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு வழங்கப்படும் பள்ளி பாட புத்தகங் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுவது வழக்கம். பழைய பாடங்கள் நீக்கப்பட்டு, புதியவை சேர்க்கப்படும்.

புதிய புத்தகம்: அதன்படி 2024-25 கல்வியாண்டில் 3ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு மாணவர்கள் புதிய புத்தங்களைப் பெறுகிறார்கள். இதில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு சோசியல் சயின்ஸ் பாடத்திற்கு எக்ஸ்ப்ளோரிங் சொசைட்டி - இந்தியா அண்ட் பியோண்ட் என்ற தலைப்பில் ஒரே புத்தகம் வழங்கப்படுகிறது. முன்பு ஹிஸ்டரி, ஜியாகிரபி, சிவிக்ஸ் என 3 புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், நடப்பு கல்வியாண்டில் 3 புத்தகங்களும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த புதிய சோசியல் சயின்ஸ் புத்தகத்தில் முழுமையாக ஒரு பாடம் (அத்தியாயம் 5: இந்தியா, அதுவே பாரதம்) 'பாரத்' என்ற வார்த்தை குறித்தும் அதன் வரலாறு, பயன்பாடு குறித்தும் இருக்கிறது. மகாபாரதம் போன்ற பண்டைய இந்திய நூல்களின் பாரதம் என்றே குறிப்பிடப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளன

மகாபாரதம்: மகாபாரதத்தை மேற்கோள் காட்டி, அந்த பாடத்தில், "இன்றைய காஷ்மீர், குருக்ஷேத்ரா (இன்றைய ஹரியானாவின் பகுதிகள்), வங்கா (வங்காளத்தின் பகுதிகள்), பிரக்ஜ்யோதிஷா (இன்றைய அஸ்ஸாம்), கச்சா ( இன்றைய கட்ச்), கேரளா ஆகிய பகுதிகளை உள்ளடக்கி இது இருக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது. இந்த இந்த பாட புத்தகத்தில் சமஸ்கிருத வார்த்தைகளின் தோற்றம், அர்த்தம் குறித்தும் விளக்கப்பட்டு இருக்கிறது.
இந்த புதிய புத்தகம் ஐந்து கருப்பொருள்களை விளக்குவதாக இருக்கிறது. இதில் முதல் தீம் புவியியலானது. அது 34 பக்கங்களையும் இரண்டு அத்தியாயங்களை உள்ளடக்கியது. பெருங்கடல்கள் மற்றும் கண்டங்கள், வாழ்க்கை ஆகிய தலைப்புகளில் பாடங்கள் உள்ளன. பூகோளத்தின் தீர்க்கரேகை மற்றும் அட்சரேகையை அளவிடுவது உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன. புவியியலுக்கு ஒதுக்கப்பட்ட மொத்தப் பக்கங்கள் 48ல் இருந்து 34ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் அறிவை என்சிஇஆர்டி முடக்கப் பார்க்கிறது! கொந்தளித்த பிரின்ஸ்
மூன்றாவது தீம்: 'கடந்த காலத்தின் நாடு' மற்றும் 'நமது கலாச்சார பாரம்பரியம் மற்றும் அறிவு மரபுகள்' ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது தீம் ஆக இருக்கிறது. இது மொத்தம் ஐந்து அத்தியாயங்களுடன் 46 பக்கங்களைக் கொண்டிருக்கின்றன. பழைய புத்தகத்தில் இருந்த பெரும்பாலான பாடங்கள் இதில் தொடர்கிறது.
'இந்திய நாகரிகத்தின் ஆரம்பம்' என்ற தலைப்பில் 6வது அத்தியாயம் இருக்கிறது. 1970களின் நடுப்பகுதியில் பாபர் மசூதி தளத்தில் அகழ்வாராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய முன்னாள் தொல்லியல் துறைத் தலைவரான மறைந்த பி.பி.லால் என்பவரின் பேட்டி இதில் இடம் பெற்றுள்ளன. அதில் அவர், இந்தத் தளத்தில் கோவில் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை.. இருப்பினும், பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அந்த இடத்தில் கோயில் தூண்கள் இருந்ததாகக் கூறியிருக்கிறார்.
கலாச்சார வேர்கள்: அடுத்து 'இந்தியாவின் கலாச்சார வேர்கள்’ என்ற தலைப்பில் உள்ள ஏழாவது அத்தியாயம், வேதங்கள் பற்றிய விரிவான விளக்கத்தைக் கொண்டுள்ளது. இதில் வேதங்களும் இதன் விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. ராமாயணத்தின் ஒரு காட்சியைச் சித்தரிக்கும் 18 ஆம் நூற்றாண்டு ஓவியமும் சேர்க்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் மூன்றாவது தீம் கீழ் வருகிறது.
நான்காவது தீம் நிர்வாகம் மற்றும் ஜனநாயகம் குறித்து இருக்கிறது. இது பெரும்பாலும் உள்ளூர் நிர்வாகம் குறித்தே விளக்குவதாக இருக்கிறது. அடுத்து ஐந்தாவது பொருளாதாரம் குறித்த பாடங்களைக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications