பெயர் மாற்றப்பட்ட 100 நாள் வேலை திட்டம்! மாநிலங்களுக்கு காலக்கெடு நிர்ணயித்தது மத்திய அரசு!
டெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்-2005, என்பதற்குப் பதிலாக, விக்க்சித் பாரத்-ரோஸ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) விபி-ஜி ராம் ஜி மசோதா-2025 எனும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்த மசோதா இன்றும் சட்டமாக்கப்படவில்லை. ஆனால், சட்டமாக்கப்பட்டவுடன் எத்தனை நாட்களில் அமல்படுத்த வேண்டும்? என்பது குறித்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விளக்கமளித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், சட்டம் அமலாக்கப்பட்டவுடன் அதை நடைமுறைப்படுத்த மாநில அரசுகளுக்கு 6 மாதங்கள் வரை டைம் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

பழைய திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் 100% மற்றும் பொருட்கள் செலவு 75% மத்திய அரசால் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால். புதிய திட்டத்தில், மொத்த நிதிச்சுமையில் 40%ஐ மாநிலங்கள் ஏற்க வேண்டும். எனவே மாநில அரசுகள் இதை கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதேபோல பழைய திட்டத்தில் இருந்த மகாத்மா காந்தி என்கிற பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த சவுகான்,
"பிரதமர் நரேந்திர மோடி, காந்தியை மதிக்கிறார். அவர் மீது பிரதமருக்கு பக்தி இருந்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். காந்தியின் கொள்கைகளை பிரதமர் பின்பற்றுகிறார். இந்த திட்டத்திற்கு முதலில் ஜவஹர் ரோஸ்கர் யோஜனா என பெயர் இருந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில், இந்த திட்டத்திற்கு மகாத்மா காந்தி NREGA என்று பெயரிட்டனர். திட்டங்கள் தொடங்கப்பட்டு பெயரிடப்படுகின்றன. இங்கு அவமரியாதை என்ற குற்றச்சாட்டுக்கு இடமில்லை.
மரியாதை என்பது வெறும் பெயர்களால் வெளிப்படுத்தப்படுவதில்லை. அது செயல்கள் மூலமும், நடத்தையின் மூலமும் வெளிப்படுத்தப்படுகிறது. நாம் காந்தியை மதித்தால், அவரது போதனைகளையும், அவரது கொள்கைகளையும் பின்பற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அதேபோல புதிய திட்டங்கள் மாநில அரசு மீது நிதித்சுமையை ஏற்றியுள்ளது பற்றி பேசிய அமைச்சர், "கூட்டாட்சி அமைப்பில் கிராமங்களை மேம்படுத்துவதில் மாநிலங்களுக்கும் பொறுப்பு உள்ளது. வருவாய் வசூல் தற்போது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி வருவாயில் பங்கு கிடைக்கிறது. இந்த நிதி கிராமங்களை மேம்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
புதிய திட்டத்தில், 11 வடகிழக்கு மற்றும் மலைவாழ் மாநிலங்கள் திட்டச் செலவில் 10% மட்டுமே ஏற்க வேண்டும். 4 யூனியன் பிரதேசத் திட்டங்களுக்கு முழு நிதியும் மத்திய அரசால் வழங்கப்படும். 19 பெரிய மாநிலங்கள் திட்டத்தின் நிதிச் சுமையில் 40%ஐப் பகிர வேண்டும்" என்று கூறியுள்ளார்.
கடந்த 2024-25 நிதியாண்டில், இத்திட்டத்தின் மொத்த செலவு ₹1.04 லட்சம் கோடி ஆகும். இதில், ஊதியத்திற்காக செலவு மட்டும் ₹73,337 கோடி. இந்த தொகையை மத்திய அரசுதான் முழுமையாக செலுத்தியது.
புதிய திட்டத்தால் மாநிலங்கள் மீதான எதிர்பார்க்கப்படும் நிதிச் சுமை குறித்து அதிகாரப்பூர்வ மதிப்பீடு இல்லை என்றாலும், 2024-25ஆம் ஆண்டு செலவினங்களின் அடிப்படையில், மாநிலங்கள் மீதான கூடுதல் நிதிச் சுமை ஆண்டுக்கு சுமார் ₹30,000 கோடியாக இருக்கும் என்று ஒரு கணக்கீடு தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications