"அந்த இடத்தில் ரத்த போக்கு".. கொரோனா நோயாளிகளை தாக்கும் புது "சைட்டோமெகலோ வைரஸ்".. டெல்லியில் ஷாக்!
டெல்லி: கொரோனா நோயாளிகளை தற்போது புதிதாக சைட்டோமெகலோ வைரஸ் (Cytomegalovirus) தாக்கி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா நோயாளிகள் பலரை தற்போது துணை நோய்கள் வரிசையாக தாக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் இந்த துணை நோய்களின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா காரணமாக தீவிர ஸ்டிராய்டு மருந்துகளை எடுக்கும் நபர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி பொதுவாக குறையும்.
உடலில் எதிர்ப்பு சக்தி திடீரென குறைவதால் பல்வேறு விதமான நோய் தாக்குதல்கள் கொரோனா நோயாளிகளுக்கும், கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கும் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதை பயன்படுத்திக்கொண்டு இது போன்ற தாக்குதல்கள் ஏற்படுகின்றன.

வைரஸ்
கருப்பு பூஞ்சை தொடங்கி வெள்ளை, மஞ்சள், பச்சை என்று பல்வேறு வகையான பூஞ்சைகள் உடலில் தாக்கியதற்கும் கூட இந்த குறைந்த நோய் எதிர்ப்பு திறனே காரணம் ஆகும். இந்த நிலையில்தான் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை புதிதாக சைட்டோமெகலோ வைரஸ் (Cytomegalovirus) தாக்கி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லி
டெல்லியில் 5 பேருக்கு இந்த சைட்டோமெகலோ வைரஸ் (Cytomegalovirus) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பொதுவாக சைட்டோமெகலோ வைரஸ் (Cytomegalovirus) பரவலாக இருக்கும் பாதிப்புதான். சைட்டோமெகலோ வைரஸ் (Cytomegalovirus) ஏற்படும் 80-90% பேருக்கு அறிகுறியே இருக்காது. இது வயிறு மற்றும் குடல் பகுதியை தாக்கும் வைரஸ் ஆகும். ஆனால் கொரோனா நோயாளிகளை தாக்கும் போது சைட்டோமெகலோ வைரஸ் (Cytomegalovirus) மிக மோசமானதாக உள்ளது.

ஏன்
உடலில் நோய் எதிர்ப்பு இல்லாததால் சைட்டோமெகலோ வைரஸ் (Cytomegalovirus) கொரோனா நோயாளிகளை தாக்கும் போது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பலருக்கு குடலில் ரத்த கசிவு ஏற்படுகிறது. இன்னும் பலருக்கு மலத்தில் ரத்த கசிவு ஏற்படுகிறது. அதேபோல் பின்பகுதியில் இருந்து ரத்த போக்கும் ஏற்படுகிறது. கொரோனா தாக்கிய நோயாளிகளை சைட்டோமெகலோ வைரஸ் (Cytomegalovirus) தாக்கும் போது இந்த கசிவு ஏற்படுகிறது.

டெல்லி
டெல்லியில் சைட்டோமெகலோ வைரஸ் (Cytomegalovirus) மூலம் பாதிக்கப்பட்ட எல்லோரும் 30-70 வயது கொண்டவர்கள். இவர்களுக்கு குடலில் ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு குடலிலும், மலத்திலும் ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டு பேருக்கு மிக அதிக அளவில் கட்டுப்படுத்த முடியாமல் ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது.

குடல்
இதனால் ஒருவருக்கு குடலில் சிறிய பகுதியை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்னொருவர் சைட்டோமெகலோ வைரஸ் (Cytomegalovirus) காரணமாக அதிக ரத்த போக்கு ஏற்பட்டு, மரணம் அடைந்துள்ளார். இவர் இறந்த போது கொரோனாவும் உச்சத்தில் இருந்து, மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். மற்ற 3 பேர் சைட்டோமெகலோ வைரஸ் (Cytomegalovirus) தாக்குதலில் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள்.

எப்படி
இதனால் மற்ற மாநிலங்களிலும் இது ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சைட்டோமெகலோ வைரஸ் (Cytomegalovirus) மனிதர்களுக்கும், குரங்குகளுக்கும் ஏற்பட கூடியது. ஆனால் இதன் இறப்பு சதவிகிதம் 2% மட்டுமே. இதனால் சைட்டோமெகலோ வைரஸ் (Cytomegalovirus) மூலம் பாதிக்கப்பட கூடியவர்கள் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டால் மீண்டு வர வாய்ப்புள்ளது.
'












Click it and Unblock the Notifications