டெல்லி சிறுமியை படுகொலை செய்யும் முன்.. கொடூரன் என்ன செய்து கொண்டிருந்தான்! வெளியான ஷாக் வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இளம்பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு முன் அந்த நபர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்த வீடியோ இப்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் பெண்களுக்கு நன்கு தெரிந்தவர்களே அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கும் சம்பவம் அதிகரித்தே வருகிறது.

 New Video revelas Moments Before Delhi Teens Murder Killer Seen Waiting For Her

அப்படித்தான் தலைநகர் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை இளம் பெண் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். 16 வயதே ஆன அந்த சிறுமியை அவரை காதலித்த வந்த இளைஞனே இப்படி கொலை செய்துள்ளான்.

டெல்லி படுகொலை: தனது காதலியைக் கொடூரமாகக் கொலை செய்த அந்த 20 வயது இளைஞனை கைது செய்த போலீசார், இப்போது இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் அவனை வைத்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு வடமேற்கு டெல்லியின் ஷஹபாத் டெய்ரி என்ற பகுதியில் தான் அந்த சிறுமியை சாஹில் என்ற இளைஞர் 22 முறை கத்தியால் குத்தி கொலை செய்தான்.

அத்துடன் நிற்காமல் அருகே இருந்த பெரிய கல்லையும் அந்த சிறுமி மீது போட்டுள்ளான். மேலும், பல முறை ஆக்ரோஷமாகவும் எட்டி உதைத்துள்ளான். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. அந்த வீடியோவை அடிப்படையாக வைத்தே போலீசார் குற்றவாளியைக் கைது செய்தனர்.

புது வீடியோ இதற்கிடையே கொலை செய்யும் முன்பு அந்த இளைஞன் என்ன செய்து கொண்டிருந்தான் என்பதை விளக்கும் சிசிடிவி காட்சி இப்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சாஹில் தனது நண்பர் ஆகாஷ் என்பவருடன் பேசுவதைக் காட்டுகிறது. ஆகாஷ் மொபைலில் எதையோ காட்டி விளக்கிக் கொண்டிருக்கிறார். சில நொடிகள் இருவரும் பேசும் நிலையில், பின் ஆகாஷ் அங்கிருந்து கிளம்புகிறான்.

அதன் பின்னர் சாஹில் அந்த சிறுமிக்காக அங்கேயே காத்திருக்கிறான். அப்போது அந்த சிறுமி தனது நண்பரின் மகனின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்றிருந்தபோது தான், இந்த கொடூர நிகழ்வு நடந்துள்ளது. காதலியை வழிமறித்த இளைஞன், அவரை இங்கே வலுக்கட்டாயமாக அழைத்து வந்து தாக்கியுள்ளான்.

 New Video revelas Moments Before Delhi Teens Murder Killer Seen Waiting For Her

சாஹில் பல முறை கத்தியால் குத்தியதை மட்டுமின்றி கல்லைப் போட்டும் தாக்குவதும் அதில் பதிவாகியிருந்தது. அந்த பெண்ணை இளைஞர் கத்தியால் குத்தும் போது, அந்தப் பகுதியில் பலர் கடந்து சென்றாலும் கூட யாருமே இந்தக் கொடூரத்தைத் தடுக்கவில்லை என்பதே வேதனை. இந்தச் சம்பவம் நடந்து 30 நிமிடங்களுக்குப் பின்னரே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த கொடூரன்: இதையடுத்து சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலில் மொத்தம் 34 இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. இருவரும் காதலித்து வந்த நிலையில், அவர்களுக்கிடையே சண்டை ஏற்படவே அந்த கொடூரன் இந்த படுகொலையைச் செய்துள்ளான். கொலையாளி டெல்லியில் ஏசி டெக்னீஷியனாக பணியாற்றி வந்துள்ளான். காதலியைக் கொன்றதை ஒப்புக் கொண்ட சாஹில், கொலை செய்தற்காகக் கவலைப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

3 ஆண்டுகளாக அந்த சிறுமியைக் காதலித்து வந்ததாகவும் இருப்பினும் அவர் திடீரென தன்னை புறக்கணிக்கத் தொடங்கியதாலேயே இப்படிச் செய்ததாகத் தெரிவித்தார். இது தொடர்பாகக் கொஞ்சக் காலமாகவே இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. அந்த பெண் இது குறித்து போலீசாரிடம் புகார் அளிப்பேன் என்றும் கூட கூறியுள்ளார். இந்தச் சூழலில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+