டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லாம் மீடியாக்கள் செய்த வேலை.. நிர்பயா குற்றவாளிகள் தரப்பு வக்கீல் பகீர் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்- வீடியோ

    டெல்லி: டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நிர்பயா தாய் ஆஷா தேவி வரவேற்றுள்ளார். அதேநேரம் குற்றவாளிகள் தரப்பு வக்கீல் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    Nirbhaya Mother welcome the verdict, Delhi court issues death warrant against all 4 convicts

    2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், டெல்லியில், நிர்பயா என்ற இளம் பெண், 6 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக டெல்லி நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் என தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடைபெற்று இன்று டெல்லி நீதிமன்றத்தால் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனைக்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு நான்கு குற்றவாளிகளும் தூக்கிலிடப்படுகிறார்கள். இது குறித்து நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆஷா தேவி, இறுதியாக எனது மகளுக்கு நியாயம் கிடைத்துள்ளது. இந்த நாட்டில் உள்ள பெண்களுக்கு, இந்த நான்கு பேருக்கு வழங்கப்பட்ட, தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கும். நீதித்துறை மீதான நம்பிக்கையை, மக்களிடம் இந்த தீர்ப்பு அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

    நிர்பயாவின் தந்தை பத்ரிநாத்சிங் கூறுகையில், இது போன்ற தீர்ப்புகள் பலாத்கார குற்றவாளிகளுக்கு மனதில் பயத்தை ஏற்படுத்தும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க உதவும் என்று தெரிவித்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பை பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

    டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் சுவாதி கூறுகையில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை கண்டிப்பாக வரவேற்கிறேன். இந்த நாட்டில் வாழக்கூடிய ஒவ்வொரு நிர்பயாக்களுக்கும் இந்த வெற்றி உரித்தாகும். ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நீதிப் போராட்டம் நடத்திய நிர்பயாவின் பெற்றோருக்கு எனது சல்யூட். இந்த குற்றவாளிகளை தண்டிப்பதற்கு எதற்காக ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டது? இது போன்ற கால விரயத்தை நாம் குறைத்திட வேண்டும், என்று அவர் தெரிவித்தார்.

    அதேநேரம் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏபி சிங், நிருபர்களிடம் கூறுகையில், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிப்பார்கள்.

    மீடியாக்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களிடம் இருந்து இந்த வழக்கில் அதிகமாக அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆரம்பம் முதலே இது போன்ற அழுத்தம் தொடர்ந்ததால் விசாரணை பாரபட்சமின்றி நடக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    Nirbhaya convicts' lawyer AP Singh: We will file curative petition in SC within a day or two. 5 senior most judges of SC will hear it. There has been pressure of media,public&political pressure in this case since beginning. Unbiased probe could not take place in this case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X