எங்கே சென்றார் நிர்மலா சீதாராமன்.. தவிர்க்க தொடங்கிய பாஜக தலைமை.. அமைச்சரவை மாற்றம் வருகிறதா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று நடந்த பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

நேற்று முதலீட்டாளர்கள், தொழில்துறை நிபுணர்ககளுடன் மத்திய அரசு அதிகாரிகள், பிரதமர் மோடி, நிதித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். வரும் பட்ஜெட் கூட்டத்தொடரை தொடர்ந்து இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.

பட்ஜெட்டில் என்ன அறிவிக்க வேண்டும், என்ன மாதிரியான திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்தனர். புதிய அறிவிப்புகள், பொருளாதார மந்த நிலை குறித்தும் ஆலோசனை செய்தனர்.இதில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது.

Recommended Video

    ABVP students in JNU violence | Video goes viral after fact check
    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளவில்லை. ஆம் நீங்கள் சரியாகத்தான் படித்துள்ளீர்கள். பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளவில்லை. இது பல்வேறு கேள்விகளை, சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

     நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சீதாராமன் கடந்த இரண்டு வாரமாக எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜேஎன்யூ கலவரத்தின் போது அது தொடர்பாக டிவிட் செய்தார். ஆனால் பேட்டி அளிக்கவில்லை. கடந்த இரண்டு வாரமாக அவர் வெளியே எங்கேயும் தென்படவில்லை.

    மோசம்

    மோசம்

    அதோடு பாஜக தலைவர்கள் யாரையும் இவர் சந்திக்கவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடர் நெருங்கி வரும் நிலையில் நிர்மலா சீதாராமன் இப்படி அடிக்கடி ''காணாமல் போவது'' பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மத்திய அமைச்சரவையில் என்ன நடக்கிறது. நிர்மலா சீதாராமன் ஏன் இப்படி வெளியே வராமல் இருக்கிறார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

    பாஜக கோபம்

    பாஜக கோபம்

    இன்னொரு பக்கம் பாஜக தலைகள் நிர்மலா சீதாராமன் மீது கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நிர்மலா சீதாராமன்தான் இந்திய பொருளாதாரம் நலிய காரணம். அவர் நிறைய தவறான முடிவுகளை எடுத்துவிட்டார். அதனால் ஆட்சிக்கும் கெட்டப்பெயர் என்று பலரும் குற்றச்சாட்டு வைக்க தொடங்கி உள்ளனராம். இதுதான் நிர்மலா சீதாராமன் ஆப்சென்ட் ஆக காரணம் என்கிறார்கள்.

    ரபேல்

    ரபேல்

    ஏற்கனவே நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போதுதான், ரபேல் ஊழல் நடந்தது என்று புகார் எழுந்தது. பாஜக மீது அது மிகப்பெரிய கறையாக மாறியது. இதனால் அப்போதே மீண்டும் நிர்மலா சீதாராமன் பதவி பெறுவது கஷ்டம் என்று செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

    மீண்டும் ஒதுக்கப்பட்டார்

    மீண்டும் ஒதுக்கப்பட்டார்

    தற்போது மெதுவாக பாஜக கூட்டங்களில் நிர்மலா சீதாராமன் ஒதுக்கப்பட்டு வருகிறார். இதனால் அவரை பாஜக நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்க திட்டமிட்டு வருகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. அமைச்சரவையில் மாற்றங்கள் வர இருக்கிறதா என்று கேள்விகள் எழுந்து வருகிறது.

    யார்

    யார்

    பாஜகவில் நிறைய பேர் நிதி அமைச்சர் பதவிக்கு திட்டமிட்டு வருகிறார்கள். ஏற்கனவே பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, நிதி அமைச்சர் ஆகும் முயற்சியை செய்து வருகிறார். அவர் தொடர்ந்து இந்தியாவின் பொருளாதார சீர்கேட்டை விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+