ஜேஎன்யூ தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது.. பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.. நிர்மலா சீதாராமன் கோபம்!
Recommended Video
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார் .
நேற்று மாலை டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளது.

இது குறித்து டிவிட் செய்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜேஎன்யூ நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. அங்கிருந்து வரும் போட்டோக்கள் அதிர்ச்சி தருகிறது. எனக்கு தெரிந்தவரை. ஜேஎன்யூ என்றால் காரசார விவாதம் மட்டும்தான். அங்கு எப்போதுமே கலவரம் நடந்தது இல்லை. ஆனால் தற்போது நிலை அப்படி இல்லை.
அங்கு நடந்த கலவரத்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன். மத்திய அரசு உடனடியாக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். என்ன நடக்கிறதோ தெரியாது, நாடு முழுக்க அரசு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் டிவிட் செய்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் ஜேஎன்யூவில் படித்த முன்னாள் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த கலவரம் குறித்து ஜேஎன்யூ மாணவர் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளனர். அதில், ஜேஎன்யூ தாக்குதல் கவலை தருகிறது. இந்த கலாச்சாரத்திற்கு எதிரான தாக்குதல் இது. மாணவர்களை இப்படி தாக்குவது வருத்தம் அளிக்கிறது, என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications