ஞாயிறையும் விடாத நிர்மலா சீதாராமன்.. பிப்ரவரி 1ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது ஏன்? சுவாரசியம்
டெல்லி: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 1 மணிநேரம் 25 நிமிடம் வரை பட்ஜெட் உரையை நிகழ்த்தினார்.
ஞாயிற்றுக்கிழமை பொதுவாக நாடாளுமன்றம் செயல்பாடத நிலையில் இன்றைய நாளை பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய அரசு தேர்வு செய்தது ஏன்? இதற்கு முன்பு ஞாயிற்றுக்கிழகைளில் பட்ஜெட் தாக்கல் செய்த வரலாறு உள்ளதா? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை.. பொதுவாக நாடாளுமன்றம் நடக்காது... பங்கு சந்தைகள் நடக்காது.. முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள் ரிலாக்ஸ் செய்யும் நாளாக உள்ளது. ஆனால் இன்று விடிந்த இந்த ஞாயிற்றுக்கிழமை ஏழைகள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பங்கு சந்தைகள் செயல்பட உள்ளன.

ஞாயிற்று கிழமை பட்ஜெட் தாக்கல்
இதற்கு முக்கிய காரணம் 2026-27 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தது தான். பெரும்பாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்றம் செயல்பாடத நிலையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி பார்க்கலாம்.
பட்ஜெட் தேதியை மாற்றிய மோடி
அதாவது பிரதமர் நரேந்திர மோடி பிரதமரான பிறகு தொடர்ந்து மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2017ம் ஆண்டுக்கு முன்பு பிப்ரவரி மாதம் கடைசி வேலை நாளில் தான் தான் மத்திய பட்ஜெட் என்பது தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த நடைமுறை மாற்றப்பட்டது.
பிப்ரவரி மாதம் இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்வது ஆங்கிலேயர்கள் பின்பற்றிய வழிமுறையாகும். இதனை பின்பற்றுவது என்பது காலனித்துவ ஆதிக்கத்தை தொடர்வது போல் இருக்கும் என மத்திய பாஜக அரசு நினைத்தது. இதையடுத்து மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்து கடந்த 2017 ம் ஆண்டு முதல் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.
தேதி மாற்றத்தின் பின்னணி
பிப்ரவரி 1ம் தேதி முதல் முதலாக மறைந்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும் தேதி மாற்றம் பற்றி அருண் ஜெட்லியே விளக்கமும் அளித்தார். இதுபற்றி அவர், ‛‛பிப்ரவரி கடைசி வேலை நாளில்மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தால் ஏப்ரல் 1ல் புதிய நிதி ஆண்டில் புதிய கொள்கைகள், மாற்றங்களை அமல்படுத்துவதற்கு ஒவ்வொரு துறைக்கும் போதிய காலஅவகாசம் கிடைக்காமல் இருந்தது.
ஆனால் பிப்ரவரி 1ல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தால் அதில் வெளியாகும் கொள்கை ரீதியான முடிவுகள், மாற்றங்களை அடுத்த நிதியாண்டில் செயல்படுத்த கூடுதலாக ஒரு மாதம் வரை கிடைக்கும்'' என்று விளக்கம் அளித்தார்.
ஞாயிற்றுக்கிழமையில் 2வது பட்ஜெட்
2017 முதல் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கலாகி வரும் நிலையில் இந்த ஆண்டு அந்த தேதி ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளது. இதனால் வழக்கத்தை மாற்றாமல் ஞாயிற்றுக்கிழமையிலேயே பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்வது இது ஒன்றும் புதிது இல்லை.
இதற்கு முன்பு 1999ல் பாஜகவின் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அப்போது அவரது அமைச்சரவையில் யஷ்வந்த் சின்ஹா அமைச்சராக இருந்தார். அப்போது பிப்ரவரி இறுதி வேலை நாளில் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வழக்கம் இருந்தது.
1999ல் பட்ஜெட் தாக்கலின்போது பிப்ரவரி 28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வந்தது. அப்போது தான் முதல் முறையாக யஷ்வந்த் சின்ஹா மத்திய பட்ஜெட்டை ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்தார். அதன்பிறகு 27 ஆண்டுகள் கழித்து இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இதற்கு முன்பு நிர்மலா சீதாராமன் 2020 ஆண்டு பிப்ரவரி 1ம் தேதியான சனிக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். பிறகு 2025ம் ஆண்டிலும் பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமையில் வந்ததால் அன்றைய தினம் அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த வரிசையில் இன்று முதல் முறையாக நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications