கடனுக்கான தவணையை கேட்கும் போது கடுமை காட்டக் கூடாது! வங்கிகளுக்கு கடிவாளம் போட்ட நிர்மலா சீதாராமன்
டெல்லி: கடனுக்கான மாதத் தவணையை திருப்பிக் கேட்கும் போது கடுமை காட்டக் கூடாது என அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு கடிவாளம் போட்டிருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், சில வங்கிகளின் ஊழியர்கள் கடனை வசூலிக்கும் போது இரக்கமற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள் என தனக்கு புகார்கள் வருவதாகவும் அதனால் கடனை திருப்பிக் கேட்கும் போது வங்கிகள் கடுமையாக நடந்துக் கொள்ளக் கூடாது என தாம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. வங்கி ஊழியர்கள் என்ற பெயரில் தனியார் வங்கிகளிலிருந்து குண்டர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு அத்துமீறும் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
தனியார் வங்கிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களும் கடனை வசூலிக்கிறோம் என்ற பெயரில் செய்யும் அட்டூழியங்களுக்கு குறைவே இல்லை. அண்மையில் கூட புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மாதத் தவணை செலுத்தவில்லை எனக் கூறி ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தவரின் 11 வயது மகளை கடத்திச் சென்று முத்தூட் நிதி நிறுவன ஊழியர் அதிர்ச்சி கொடுத்தார்.
அதேபோல் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு மாதம் இ.எம்.ஐ. செலுத்தவில்லை எனக் கூறி வீட்டிலிருந்த பொருட்களை வீதியில் தூக்கி வைத்த எக்விடாஸ் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். இது போன்ற பல உதாரணங்களை கூறலாம்.
இந்தச் சூழலில் மாதத் தவணையை திருப்பிக் கேட்கும் போது கடுமை காட்டக் கூடாது என அனைத்து வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சர் அறிவுறுத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications