சிறு சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் குறைப்பு வாபஸ்.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
டெல்லி: சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4%-ல் இருந்து 3.5%ஆக குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இதேபோல் பிபிஎப், வருங்கால வைப்பு-ஓராண்டு கால வைப்பு நிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட வட்டி விகிதம் குறைக்கப்பட்டதும் வாபஸ் பெறப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே இருந்த பழைய வட்டி விகிதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் குறைப்பு
ஏப்ரல் 1-ம் தேதி முதல் வங்கிகளில் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் 4%ல் இருந்து 3.5%ஆக குறைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் நேற்று இரவு தெரிவித்தது. மேலும் பொது வருங்கால வைப்பு நிதி(PPF) வட்டி விகிதம் 7.1%ல் இருந்து 6.4%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
ஒராண்டுக்கான வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது. மேலும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்படும் எனவும் மத்திய நிதியமைச்சகம் கூறி இருந்தது.

வாபஸ் பெறுவதாக அறிவிப்பு
இந்த நிலையில் இந்த சேமிப்பு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4%-ல் இருந்து 3.5%ஆக குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுவதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பழைய நடைமுறை தொடரும்
இதேபோல் பிபிஎப், வருங்கால வைப்பு-ஓராண்டு கால வைப்பு நிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட வட்டி விகிதம் குறைக்கப்பட்டதும் வாபஸ் பெறப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஏற்கனவே இருந்த வட்டி விகிதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை நேற்று நிதியமைச்சகம் குறைத்த நிலையில் இன்று வாபஸ் பெறுவதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிபிடத்தக்கது.
-
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications