கொரோனா பரவல்.. வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உட்பட பல முக்கிய விஷயங்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கோவிட் -19ன் பொருளாதார தாக்கத்தை சமாளிப்பதற்கான அறிவிப்புகளை, இன்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வருமான வரி தாக்கலுக்கான கால நீட்டிப்பு உள்ளிட்டவை இதில் அடங்கும்.

Recommended Video

    பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, சமீபத்தில் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும் இதை சரி செய்வதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பொருளாதார பணி குழு அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

    Nirmala Sitharaman may unveil steps to tackle economics issue due to Covid-19

    இந்த குழு சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசனை நடத்தி உரிய மீட்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்று மோடி கூறியிருந்தார்.

    இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நேற்று நிதி மசோதா மீதான பதில் உரையின்போது அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று அவர் அறிவிப்பு வெளியிடவில்லை.

    இந்த நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு டெல்லியில் பிரஸ் மீட்டுக்கு அழைப்புவிடுத்துள்ளார் நிர்மலா சீதாராமன். அப்போது நிதித்துறை துணை அமைச்சர் அனுராக் தாக்கூர் உடனிருந்தார்.

    அப்போது நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

    2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய 2020 ஜூன் 30 வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. தாமதமாக செலுத்தப்படும் வருமான வரிக்கான வட்டி 12 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ஆதார்-பான் இணைப்புக்கான கெடு மார்ச் 31 வரையில் இருந்தது, அது ஜூன் 30ம் தேதிக்கு நீட்டிக்கப்படுகிறது.

    TDS தாமதமாக வைப்பு வைக்கப்பட்டால் 9% வட்டி மட்டும் வசூலிக்கப்படும். ஜூன் 30, 2020 வரையில் இந்த சலுகை. மற்றபடி இதில் கால நீட்டிப்பு கிடையாது.

    'Vivad Se Vishwas' திட்டம் ஜூன் 30, 2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வட்டி இதற்கு கிடையாது.

    மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத ஜி.எஸ்.டி வரி செலுத்துதல் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுகிறது. ரூ .5 கோடிக்கு குறைவான வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு, வட்டி, அபராதம் மற்றும் தாமத கட்டணம் வசூலிக்கப்படாது. வாரியக் கூட்டங்களை நடத்துவதற்கான 60 நாட்கள் காலக்கெடு தளர்த்தப்படுகிறது. 60 நாட்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தாவிட்டால் அது குற்றமாக பார்க்கப்படாது. வாரிய கூட்டங்களுக்கான காலத் தளர்வு அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு நீடிக்கும்.

    புதிதாக இணைக்கப்பட்ட நிறுவனங்கள் வணிகத்தைத் தொடங்குவதற்கான அறிவிப்பை தாக்கல் செய்ய 6 மாதங்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

    சிறு மற்றும் குறு தொழில்களுக்கான திவால் நிலை மற்றும் திவால் குறியீடு (ஐபிசி) இயல்புநிலை வரம்பை ரூ .1 லட்சத்திலிருந்து ரூ .1 கோடியாக உயர்த்துகிறோம். எனவே நிறுவனங்கள் நொடித்துப்போவதைத் தடுக்கலாம்.

    மீன் வளத்துறை ஆவண சரிபார்ப்பு, 7 நாட்களுக்கு பதில் 3 நாட்களில் முடிவடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+