நிர்மலா சீதாராமன் இதையும் விடல.. கெஜ்ரிவால் வாயே திறக்கல? நிதியமைச்சர் சொன்னதுமே, கடுப்பான ஆம் ஆத்மி
டெல்லி: ஆம் ஆத்மியின் சுவாதி மாலிவால் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.. அதற்கேற்றவாறு, பாஜகவும் இந்த விஷயத்தை விடுவதாக தெரியவில்லை.. இதனால், டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளராக இருந்து வருபவர் பிபவ் குமார்... கெஜ்ரிவால் வீட்டில் வைத்தே, பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பியும், டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

கன்ட்ரோல் ரூம்: இது தொடர்பாக டெல்லி கன்ட்ரோல் ரூமுக்கு தொடர்புகொண்டு, கெஜ்ரிவால் வீட்டில், கெஜ்ரிவாலின் தனி உதவியாளராலேயே தான் தாக்கப்பட்டதாக சுவாதி புகார் கூறினார்.. அதாவது, கடந்த மே 13ம் தேதி காலை டெல்லி போலீசிடம் முறையிட்டார் சுவாதி.. இதனையடுத்து டெல்லி போலீசார் இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அதேபோல, சுவாதி மாலிவாலிடம் கெஜ்ரிவால் தனி செயலாளர் தவறாக நடந்து கொண்டது உண்மைதான் என்று ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சஞ்செய் சிங்கும் கூறியிருந்தார்.
விளக்கம்: ஆனால், சுவாதியின் குற்றச்சாட்டு குறித்து ஆரம்பத்தில் வாய்திறக்காத ஆம் ஆத்மி கட்சி, அதற்கு பிறகே இதுகுறித்து கருத்து கூறியது.. சுவாதி மாலிவால் தாக்கப்பட்டது உண்மைதான் என்றும், இந்த விவகாரம் குறித்து கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்றும் விளக்கமளித்திருந்தது.. அத்துடன், கெஜ்ரிவாலின் உதவியாளர் பதவியிலிருந்து பிபவ் குமார் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி ரீதியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை கெட்டியாக பிடித்து கொண்டன.. அதிலும் டெல்லி பாஜகவினர், இந்த சம்பவத்தை விடுவதாக இல்லை.. தினம் தினம் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசியல் ரீதியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.. அதைவிட முக்கியமாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்த விவகாரத்திற்குள் நுழைந்து, ஆம் ஆத்மியை விமர்சித்துள்ளார்.
முழு காரணம்: டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், "டெல்லியில் உள்ள பெண்கள் கேட்கிறார்கள், இங்குள்ள முதலமைச்சரால், டெல்லியில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியுமா? இந்த சம்பவத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால்தான் முழு காரணம்...
கெஜ்ரிவால் தன்னுடைய கட்சி பெண் எம்பி மீதான தாக்குதல் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது நம்பமுடியாதது.. மேலும் அது ஏற்றுக்கொள்ளவும் முடியாதது. இந்த விவகாரம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் வாய் திறக்க வேண்டும்.. அத்துடன் மன்னிப்பும் கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
ட்வீட்: முன்னதாக, இந்த விவகாரம் குறித்து சுவாதி மலிவால் ட்வீட் ஒன்றினை பதிவிட்டிருந்தார்.. அதில், "கடந்த சில நாட்கள் எனக்கு மிக மோசமான நாட்களாக அமைந்தன. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி.. பிற கட்சியின் தூண்டுதலின் பேரில் நான் இப்படி நடந்து கொள்கிறேன் என என்னை பேசியவர்களுக்கும் இறைவன் மகிழ்ச்சியை கொடுக்கட்டும். இந்த விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என பாஜகவிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இந்த விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என பாஜகவிடம் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பாதிக்கப்பட்ட சுவாதி மாலிவால் கேட்டுக் கொண்டபிறகும், பாஜக இந்த விஷயத்தை விடுவதாக இல்லை.. தேர்தல் பரபரப்புகளுக்கு நடுவில் டெல்லி அரசியலே அனலடித்து கொண்டிருக்கிறது.
கன்னத்தில் அறைந்தார்: முன்னதாக சுவாதி போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு அளித்திருந்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை 8 முறை கன்னத்தில் அறைந்ததாகவும், தன்னை கொன்று புதைத்துவிடுவேன் என மிரட்டி முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதியில் பிபவ் குமார் தாக்கியதாகவும், தான் வலியில் துடித்ததாகவும், சட்டை பட்டன்கள் கிழிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலை சிக்கவைக்க பாஜக தீட்டிய சதித்திடத்தின் முகமாக, சுவாதி மால்வால் உள்ளார் என்று ஆம் ஆத்மி பதிலுக்கு குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications