தர்மத்தின் வழியில் ஆட்சி.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் சொன்ன மகாபாரத ஸ்லோகத்தின் அர்த்தம் என்ன?
டெல்லி: 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையின் போது மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள சமஸ்கிருத ஸ்லோகங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர் கற்க கசடற என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
இரண்டாவது முறையாக காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அது போல் மத்திய நிதியமைச்சராக 4ஆவது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலை செய்தார்.

பட்ஜெட்
தமிழகத்தில் பிறந்த நிர்மலா சீதாராமன் அவரது பட்ஜெட் உரையில் திருக்குறள், ஆத்திச்சூடி போன்றவற்றிலிருந்து வரிகளை எடுத்து மேற்கோள்காட்டுவார். கடந்த 2019- 2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது புறநானூற்று பாடலை மேற்கோள்காட்டினார். பாண்டிய மன்னன் அறிவுடைநம்பியைக் காணச் சென்ற புலவர் பிசிராந்தையார் அரசன் சிறப்படைய இந்த பாடல் வரிகளை பாடினார்.

என்ன பாடல்
"காய்நெல் அறுத்து கவளம் கொளினே, மாநிறைவு இல்லதும் பல்நாட்டு ஆகும்" என்ற புறம்- 184 ஆவது பாடலை மேற்கோள்காட்டினார். அதாவது நெல்லை அறுத்து யானைக்கு உணவு சமைத்து போட்டால் அது பல நாட்களுக்கு உணவாகும். ஆனால் யானையே சாப்பிட்டு கொள்ளட்டும் என நினைத்து அதை நெல்வயலில் இறக்கினால் பசிக்கு உண்பதை விட காலில் மிதிபட்டு வீணாவதுதான் அதிகமாக இருக்கும். அது போல் குடிமக்களிடம் அரசே முறையாக வரி வாங்கினால் கோடியாக செல்வம் வளரும் என்று விளக்கினார்.

மேற்கோள்காட்டிய அமைச்சர்
அது போல் கடந்த 2020- 2021-ஆம் ஆண்டு ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன் அடுத்த ஆண்டு 2021- 2022 ஆம் ஆண்டு "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு" என்ற திருக்குறளையே உதாரணமாக கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த முறை அவர் தனது பட்ஜெட்டில் மகாபாரத வரிகளை மேற்கோள்காட்டினார்.
Recommended Video

12 ஆவது பருவம்
மகாபாரதம் 18 பருவங்களில் 12 ஆவது பருவமான சாந்தி பருவத்தில் 72ஆவது ஸ்லோகத்தை மேற்கோள்காட்டி நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார். இந்த ஆண்டு வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். பீஷ்மர் வழங்கிய அறிவுரை சாந்தி பருவத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் மன்னன் குடிமக்களின் நலனை உறுதி செய்ய சிறிதும் தாமதமின்றி அத்தனை ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். தர்மத்தின் வழியில் ஆட்சி நடத்த வேண்டும். தர்மத்தின் வழிநின்றே வரி வசூலிக்க வேண்டும்.என அர்த்தம் வரும் பாடலை மேற்கோள்காட்டினார். அதாவது இந்தியா, மகாபாரதம் போன்ற இதிகாச நூல்களில் இருந்து பெற்ற அறிவின்படியே வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. நிலையான கணிக்கக் கூடிய வரிவிதிப்பு என்ற மத்திய அரசின் கொள்கையை முன்னெடுக்கும் வகையில் மத்திய பட்ஜெட் 2022-23-ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்த (Economic reforms) அறிவிப்புகள் இருக்கும் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications