Union budget 2025-26: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் படைக்க போகும் புதிய வரலாறு.. சுவாரசிய தகவல்
டெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய நிதி அமைசச்சர் நிர்மாலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். அவர் தாக்கல் செய்ய உள்ள 8- வது பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், இன்று நிர்மலா சீதாராமன் புதிய வரலாறு ஒன்றையும் படைக்க உள்ளார். அது என்ன? என்பது பற்றிய விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்று 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இன்று காலை 11 மணிக்கு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள 8-வது பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கும் நிர்மல சீதாராமன் புதிய சாதனை ஒன்றையும் படைக்க உள்ளார். அதாவது, தொடர்ந்து 8 பட்ஜெட்டுகள் தாக்கல் செய்ய இருக்கும் நிதி அமைச்சர் என்ற பெருமையும் நிர்மலா சீதாராமனுக்கு கிடைக்க உள்ளது.

மொரார்ஜி தேசாயின் ரெக்கார்டு
இந்தியாவின் நிதி அமைச்சராக கடந்த 2019 ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் நியமனம் செய்யப்பட்டார். பிரதமர் மோடி இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போதும் முதல் 7 பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இன்று தனது 8-வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருப்பதன் மூலம் இதுவரை அதிக பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் ரெக்கார்டை நெருங்கியுள்ளார்.
ப சிதம்பரம்
1959 முதல் 1969 கால கட்டத்தில் மொரார்ஜி தேசாய் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதாவது, 1959 ஆம் ஆண்டு முதல் 1964 ஆம் ஆண்டு வரை நிதி அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். அதன்பிறகு 1967 ஆம் ஆண்டு முதல் 1969 கால கட்டத்தில் 4 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 9 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். ஆனால் தொடர்ச்சியாக இன்றி வெவ்வேறு கால கட்டங்களில் தாக்கல் செய்தார்.
தொடர்ச்சியாக 8 வது முறை
பிரணாப் முகர்ஜியும் 8 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். பிவி நரசிம்ம ராவ் காலத்தில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங்க் 1991 முதல் 1995 வரை 5 பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். தொடர்ச்சியாக 8 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் என்ற பெருமை நிர்மலா சீதாரமனுக்கு இன்று தாக்கல் செய்வதன் மூலம் கிடைக்க உள்ளது. எட்டுமுறை பட்ஜெட் தாக்கல் என்ற பெருமை பெற போகும் நிர்மலா சீதாராமன், நீண்ட நேரம் பட்ஜெட் உரை நிகழ்த்தியும் சாதனை படைத்து வருகிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 40 நிமிடம் பட்ஜெட் உரை நிகழ்த்தினார். மிகவும் குறுகிய நேர பட்ஜெட் உரை என்றால் கடந்த 1977 ஆம் ஆண்டு ஹிருபாய் முலிஜ்பாய் படேல், வெறும் 800 வார்த்தைகள் மட்டுமே இடைக்கால பட்ஜெட் உரையில் வாசித்தார்
மாலையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்
கடந்த 1999 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பட்ஜெட் என்பது மாலை 5 மணிக்கு தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியவில் இப்படி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைபின்பற்றியே 1999-ஆம் ஆண்டு வரை பட்ஜெட் என்பது மாலை நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் யஷ்வந்த் சின்ஹா காலை 11 மணிக்கு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
2017 ஆம் ஆண்டு மற்றொரு மேஜர் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்த ஆண்டில் இருந்துதான் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மார்ச் மாதத்திற்குள் நாடாளுமன்ற நடைமுறைகள் முடிந்து புதிய நிதி ஆண்டு துவங்குவதற்குள் பட்ஜெட் அறிவிப்புகள் நடைமுறை செய்ய ஏதுவாக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது.












Click it and Unblock the Notifications