கைலாசாவில் சுனாமியா பூகம்பமா?.. நீங்கள் பண்றதை பார்த்தால் அப்படிதான் இருக்கு.. நித்யானந்தா "கோபம்"
டெல்லி: கைலாசாவில் ஏதோ சுனாமியோ பூகம்பமோ வந்துவிட்டது போல் நீங்கள் செய்வதெல்லாம் இருப்பதாக பக்தர்கள், சீடர்களிடம் நித்தியானந்தா செல்லமாக கோபித்துக் கொண்டார்.
அன்றாடம் வீடியோவில் சொற்பொழிவு ஆற்றி வரும் நித்யானந்தாவை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதனால் அவர் இறந்துவிட்டதாக ஹேட்டர்ஸ் சிலர் வதந்தி பரப்புவதாக கூறி ரஜினி படத்தில் வரும் "திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" என்ற டயலாக்குடன் தொபுகடீரென சமூகவலைதளத்தில் தோன்றினார்.
பின்னர் 27 மருத்துவர்கள் என்னை சுற்றி இருக்கிறார்கள். என் உடலுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்கிறார். எல்லா ரிப்போர்ட்களும் நார்மலாக இருக்கிறது என்கிறார். ஆனாலும் இவர் எதை சாப்பிட்டாலும் வாந்தி வருகிறது என்கிறார். என்ன காரணம் என தெரியவில்லை. நான் நிர்வ கல்பி சமாதி நிலையில் இருப்பதாக சொல்கிறார்.
Recommended Video

எதற்காக 27 மருத்துவர்கள்
ஆனால் எதற்காக அவரை சுற்றி இத்தனை மருத்துவர்கள், இத்தனை ரிப்போர்ட்கள், மருத்துவ பரிசோதனைகள், எம்ஆர்ஐ ஸ்கேன்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. தனது நாடு சிறிய தீவு என்பதால் பெரிய மருத்துவமனை இருந்தால் உடல்நிலை தேறும் என மருத்துவர்கள் கூறுவதாக கூறும் நித்யானந்தா, கூடவே ஒரு பிட்டையும் போடுகிறார்.

இயற்கை பேரிடர்
அதற்காக யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்கிறார். அடுத்த போஸ்ட்டில் பணம் அனுப்புவதை நிறுத்துங்கள், இயற்கை பேரிடர்களான சுனாமி, பூகம்பம் ஏற்பட்டதை போல் பணத்தை அனுப்பி வருகிறீர்கள். அதை நிறுத்துங்கள். சொத்துகளை விற்று பணம் அனுப்புவதாக கேள்விப்பட்டேன், இதெல்லாம் வேண்டாம் என்கிறார்.

அறக்கட்டளைகளுக்கு குவியும் பணம்
உலகம் முழுவதும் உள்ள அறக்கட்டளைகளுக்கு நிறைய பணம் குவிவதாக கூறும் நித்யானந்தா, அந்த பணத்தை மீண்டும் அவரவர் கணக்குகளே அனுப்பும் வேலையை ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. மேலும் ஒரு வேலை அடிக்காதே அடிக்காதே என அரசியல்வாதிகள் சொன்னால் அடி என அர்த்தம். அது போல் இவரும் பணம் அனுப்பாதே என்றால் பணம் அனுப்பு என்ற அர்த்தமா என தெரியவில்லை.

கைலாசா எங்கே
உடலும் மெலிந்த நிலையில் காட்சியளிக்கிறார். இதுவும் ஏன் என தெரியவில்லை. கைலாசா எப்படி எங்கே இருக்கிறது, எப்படி இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறதோ அதே போல்தான் நித்யானந்தாவின் உடல்நிலை குறித்த விஷயங்களும் சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன. ஒரு வேளை இன்டர்போலீஸ் இவரை தேடுவதால் இது போன்ற நாடகங்களை நடத்துகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications