மூடிய அறைக்குள் தூங்கும் பழக்கமே இல்லையாம்.. கைலாசா எங்கே இருக்கிறது.. துப்பு கொடுத்த நித்தியானந்தா
டெல்லி: கைலாசா எங்கே இருக்கிறது என்பது குறித்து தனது சொற்பொழிவில் நித்தியானந்தா துப்பு கொடுத்துள்ளார்.
நித்தியானந்தா- பிடதி ஆசிரமம் நடத்தி வந்த இவர் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்தார். விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் அவர் திடீரென தலைமறைவாகிவிட்டார்.
ஒரு நாள் வீடியோவில் தோன்றி தான் கைலாசா எனும் தீவை விலைக்கு வாங்கிவிட்டதாகவும் அங்குதான் தான் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இவர் சொல்லும் இந்த கைலாசா எனும் தீவு எந்த கண்டத்தில் இருக்கிறது என்பது கூட தெரியவில்லை.

பக்தர்கள்
எனினும் அவர் தினந்தோறும் தனது பக்தர்களுக்கு போடும் வீடியோவின் ஐபி அட்ரஸ்ஸை வைத்து கண்டறிய போலீஸார் திட்டமிட்டனர். ஆனாலும் அவர்களது முயற்சிகள் வீணாகின. இந்த நிலையில் கைலாசா நாட்டுக்கு தான் அதிபர் என நித்தியானந்தா பிரகடனப்படுத்திக் கொண்டார்.

கைலாசாவில் குடியேற பாஸ்போர்ட்
மேலும் கைலாசாவில் மக்கள் குடியேற பாஸ்போர்ட், கைலாசாவுக்கான தனிக்கொடி, கரன்சி ஆகியவற்றையும் நித்தி அறிமுகப்படுத்தினார். கொரோனா, லாக்டவுன், பொருளாதார நெருக்கடி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என எதை பற்றியும் கவலைப்படாமல் நித்தியானந்தா தனி உலகத்தில் வாழ்ந்து வருவதால் கைலாசாவுக்கு செல்ல இளைஞர்கள் விருப்பமனுக்களை தாக்கல் செய்துவருகிறார்கள்.

கைலாசாவில் தொழில் தொடங்க
அது போல் கைலாசாவில் தொழில் தொடங்கவும் பலர் விண்ணப்பித்துள்ளார்கள். இந்த நிலையில் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை அவர் சூசகமாக ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். அதாவது கைலாசாவில் நித்தியானந்தாவின் அறைக்கு கதவுகளே கிடையாதாம்.

மூடிய அறைக்குள் தூங்கும் பழக்கமில்லை
மூடிய அறைக்குள் தூங்கும் பழக்கமே நித்தியானந்தாவுக்கு இல்லையாம். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தனது அறைக்கு வந்து தன்னுடன் எதை பற்றி வேண்டுமானாலும் கலந்துரையாடலாம் என்கிறார். ஊஞ்சலில் படுத்து கொண்டு பனி படர்ந்த மலையையும் கடலையும் ரசிப்பாராம்.
Recommended Video

பனிமலையும் கடலும் ஒன்றாக இருக்கும் இடம்
எனது வீடியோவை பார்க்கும் மக்கள் பனிமலையும் கடலும் ஒன்றாக எங்கே இருக்கிறது என கூகுளில் தேட ஆரம்பித்திருப்பார்கள் என நித்தியானந்தா கிண்டல் செய்துள்ளார். நிஜமாகவே கைலாசாவில் கடலும் பனிமலையும் இருக்கிறதா என தெரியவில்லை. தன்னை பரமசிவன் என சொல்லிக் கொள்ளும் நித்தியானந்தா, கைலாசா மாலையில் சிவபெருமான் பனிமலை, கடல் இருக்கும் இடத்தில்தான் இருப்பார். இதை எத்தனையோ சினிமாக்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஒரு வேளை இந்த படத்தில் வரும் சீனை மனதில் வைத்துக் கொண்டு பொழுதுபோக்கிற்காக அப்படி சொன்னாரா என தெரியவில்லை. எது எப்படியோ எனக்கு ராஜாவா நான் வாழுறேன்... எதுவும் இல்லைன்னாலும் ஆளுறேன் என்ற பாடலுக்கு ஏற்ப தனிக்காட்டு ராஜாவாகவே நித்தி வாழ்ந்து வருகிறார் போங்கள்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications