டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பிரச்சினையை மடை மாற்ற குறிவைக்கப்படுகிறேன்.. புதிய வீடியோவில் போலீஸையே கலாய்த்த நித்தி

Google Oneindia Tamil News

Recommended Video

    புதிய வீடியோவில் போலீஸையே கலாய்த்த நித்தி

    டெல்லி: தமிழக பிரச்சினையை மடை மாற்றவே நான் குறிவைக்கப்படுகிறேன் என புதிய வீடியோவில் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

    சுவாமி நித்தியானந்தா மீது சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. அண்மையில் பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போலீஸில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது 4 மகள்களை பெங்களூரில் உள்ள நித்தியானந்தாவின் குருகுலத்தில சேர்த்தேன்.

    அவர்களை அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்திற்கு கடத்தி சென்று சித்ரவதை செய்ததாக கூறியிருந்தார். இதையடுத்து போலீஸார் ஆசிரமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஜனார்த்தன சர்மாவின் மகள்களை மீட்டனர்.

    ஹைகோர்ட்டில்

    ஹைகோர்ட்டில்

    4 மகள்களில் 2 பேர் மட்டுமே ஜனார்த்தன ச்ரமாவுடன் செல்ல ஒப்புக் கொண்டனர். மற்ற 2 பெண்களை தங்களிடம் ஒப்படைக்க கோரி குஜராத் ஹைகோர்டில் ஜனார்த்தன சர்மா வழக்கு தொடுத்துள்ளார்.

    நித்தியானந்தா ஆசிரமத்தில் பல அருவருப்பான சம்பவங்கள் நடந்திருக்கு.. ஜனார்தன சர்மா பகீர் பேட்டிநித்தியானந்தா ஆசிரமத்தில் பல அருவருப்பான சம்பவங்கள் நடந்திருக்கு.. ஜனார்தன சர்மா பகீர் பேட்டி

    நித்தியானந்தா

    நித்தியானந்தா

    இதனிடையே மீட்கப்பட்ட குழந்தைகளிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்களை கட்டாயப்படுத்தி நிதி வசூல் செய்ய வைத்தனர். ஒருவரிடம் இருந்து ரூ 3 லட்சம் முதல் ரூ 8 கோடி வரை வசூல் செய்ய வைத்தனர். பணமில்லாவிட்டால் நிலத்தை எழுதி வாங்கி வருமாறு கூறுவர் என்றனர்.

    பெண் சீடர்கள்

    பெண் சீடர்கள்

    இந்த நிலையில் ஆசிரமத்தில் இருந்த இரு பெண் சீடர்களை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக நித்தியானந்தாவிடம் விசாரணை நடத்த முற்பட்ட போது அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியானது.

    பிரச்சினை

    பிரச்சினை

    இந்த நிலையில் போலீஸாரை கலாய்த்து நித்தியானந்தா புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில் நான் பேசும் தமிழ் யாருக்குமே புரியவில்லை. பேச்சை புரிந்து கொள்ளாமல் காவல் துறை என் மீது வழக்கு பதிவு செய்துவிடுகிறார்கள். தமிழகத்தில் ஏதேனும் ஒரு பிரச்சினையை மடை மாற்றவே என்னை குறி வைக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

    English summary
    Nithyananda in a new video says thay he was framed by Tamilnadu police to divert the issues in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X