44 வயசு! ஒரு தலைவனுக்கு வலி தாங்கும் தன்மைதான் வலிமை.. யாரை சொல்கிறார் நித்யானந்தா.. ஏன் என்னாச்சு?
டெல்லி: 10 லட்சம் பேரை கொண்ட சன்யாச படையை உருவாக்குவேன் என நித்தியானந்தா சபதம் ஏற்றுள்ளார்.
Recommended Video
பாலியல் வழக்கு, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய நித்யானந்தா கைது நடவடிக்கையை தவிர்க்க வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அங்கு தனது சீடர்கள், சிஷ்யைகளுடன் கைலாசா எனும் புதிய தீவில் தங்கியுள்ளார்.
கைலாசாவுக்கு தனி பாஸ்போர்ட், தனி கொடி என நித்யானந்தா அறிமுகப்படுத்திய போதிலும் அந்த தீவு எங்கிருக்கிறது என்பதை மட்டும் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏதோ ஒரு திரைக்கு முன்பு அமர்ந்தே அவர் சத்சங்கங்களை மேற்கொண்டு வந்தார்.

கைலாசா
தான் நாட்டை விட்டு வெளியேறி கைலாசா வந்ததை பலர் கிண்டல் செய்தனர். ஆனால் இன்று கொரோனா நோயால் அரசாங்கமே தனிமைப்படுத்திக் கொள்ள சொல்கிறது என கிண்டலாக தெரிவித்திருந்தார். இதற்கு நெட்டிசன்களும் தலைவா நீங்கள் தீர்க்கதரிசி என்றனர். எத்தனை கஷ்டம் வந்தாலும் நித்தி மட்டும் ஜாலியாக இருந்து வந்தார்.

திரும்பி வந்துட்டேன்
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் நித்யானந்தா நேரலையில் தோன்றவே இல்லை. இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியாகின. அவருக்கு பலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒட்டாத குறையாக சமூகவலைதளங்களில் பதிவுகளை போட்டிருந்தனர். ஆனால் ஒரு நாள் திரும்ப வந்துட்டேனு சொல்லு என கூறி பேஸ்புக்கில் அவர் முகத்தை காட்டாமல் ஒரு பதிவை போட்டிருந்தார்.

மருத்துவர்கள்
தன்னை சுற்றி மருத்துவர்கள் அதிகம் பேர் இருப்பதாகவும் தன்னால் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை, வென்டிலேட்டர், ஆக்ஸிமீட்டர் வைத்திருப்பதாகவும் உருக்கமாக தெரிவித்திருந்தார். மேலும் தான் சமாதி நிலையில் இருப்பதாகவும் கூறி அனைவரையும் குழப்பினார்.

44 வயது ஆச்சு
இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு 44 வயசு ஆச்சு. நான் சாதிக்காதது எதுவுமில்லை. பல பிரச்சினைகளை சந்திப்பதால் ஷிரத்தன்மை எனக்குள் ஏற்பட்டது. நம்மை பற்றி நமக்கே ஒரு தெளிவு வந்திருக்கிறது. எப்போதும் தலைவனாக இருக்கும் நபருக்கு வலிதாங்கும் தன்மைதான் வலிமை.

10 லட்சம்
10 லட்சம் பேரை திரட்டி சன்யாச படையை உருவாக்குவேன். பரமேஸ்வரன் பாதத்தில் சமர்பித்தே தீருவேன். பரமசிவனின் அருளால் இதை செய்து முடிப்போம் என்று நித்யானந்தா வீடியோவில் தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications