டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்னும் ஐந்து வருஷம்தான்.. கைலாசத்திற்கு 1 லட்சம் பேர் வந்துடுவாங்க.. ஆடியோவில் நித்தி பரபரப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: அடுத்த 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்குள்ளாக கைலாசாவில் ஒரு லட்சம் பேர் நிரந்தரமாக தங்குவதற்கேற்ப கட்டமைக்கப்படும் என புதிதாக வெளியிட்டுள்ள ஆடியோவில் நித்யானந்தா பேசியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமம் நடத்தி வந்தவர் நித்யானந்தா. இவர் மீது கடத்தல் பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சில வழக்குகள் நிலுவையிலும் உள்ளன.

அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். அவரது பாஸ்போர்ட் தேதி காலாவதியான நிலையில் கப்பல் மூலமாக தப்பி சென்றது தெரியவந்தது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் ஒரு கோடியை தொட்ட இந்தியா.. அதிக பாதிப்பு கொண்ட முதல் 10 மாநிலங்கள் எவை?கொரோனா வைரஸ் பாதிப்பில் ஒரு கோடியை தொட்ட இந்தியா.. அதிக பாதிப்பு கொண்ட முதல் 10 மாநிலங்கள் எவை?

பரபரப்பு

பரபரப்பு

இன்டர்போல் உதவியுடன் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உலகம் முழுவதும் தேடுதல் வேட்டையில் நடந்து வரும் நிலையில் நித்யானந்தா சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களில் தோன்றி அவரது சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் அவர்
கைலாசா எனும் ஒரு தீவை உருவாக்கியுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நித்யானந்தா.

ஆன்லைன் பதிவு

ஆன்லைன் பதிவு

இந்த நாட்டில் குடியேற பாஸ்போர்ட்டையும் அவர் வெளியிட்டிருந்தார். ஆன்லைன் மூலம் பதிவு செய்யவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா நாட்டுக்கு வந்தால் கைலாசா நாட்டின் சொந்த விமானம் மூலம் கைலாசாவுக்கு இலவசமாக அழைத்து செல்லப்படுவர் என அறிவித்திருந்தார்.

இலவசம்

இலவசம்

கைலாசாவில் 3 நாட்கள் மட்டுமே தங்க முடியும் என்றும் அவ்வாறு தங்குவோருக்கான முழு செலவையும் தான் ஏற்பதாகவும் 3 நாட்கள் முடிந்த பிறகு மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு இலவசமாகவே அனுப்பி வைக்கப்படுவர் என்றும் தெரிவித்திருந்தார்.

5 ஆண்டுகள்

5 ஆண்டுகள்

இந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருக்கையில் ஒரு லட்சம் பேர் நிரந்தரமாக வாழுகின்ற இடமாக அடுத்த 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் கட்டமைக்கப்படும் என்று கூறிய நித்யானந்தா கைலாசா ஏன் என்பது குறித்தும் கூறியுள்ளார்.

English summary
Nithyananda says that Kailasa will be soon structured to stay 1 lakh people in another 5 to 10 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X