கைலாசாவாசிகளே! "நான் உயிரோடு இருக்கிறேன்".. அதை விட ஒரு குட் நியூஸ் இருக்கிறது".. நித்யானந்தா
டெல்லி: நித்யானந்தாவால் சரளமாக பேச முடிவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார். இதனால் நெட்டிசன்கள் குருநாதா வந்துட்டீங்களா என கேட்டு நலம் விசாரித்து வருகிறார்கள்.
கைலாசாவுக்கு ரூ 2000 கோடி தங்கக் கட்டிகளுடன் நித்யானந்தா சென்றதாக கூறப்படுகிறது. இந்த தங்கத்தை அமெரிக்காவில் ஒரு வங்கியில் வைத்திருந்ததாகவும் அதை நித்திக்கு நம்பிக்கையாக இருந்த சிஷ்யர்கள் கூட்டம் ஏமாற்றிவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அதிர்ச்சியிலும் கவலையிலும் நித்யானந்தாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு நித்யானந்தா லைவ் வீடியோவில் தோன்றாமல் இருந்து வருகிறார்.

கதைகள்
இதனால் அவர் இறந்துவிட்டார் என்றெல்லாம் கதைகள் கட்டப்பட்டன. ஆனால் திரும்பி வந்துட்டேன் என கபாலி வசனத்தை கூறி தனக்கு மானசீகமாக "கண்ணீர் அஞ்சலி" போஸ்டர் ஒட்டிய நெட்டிசன்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து தொடர் பேஸ்புக் பதிவுகளை போட்டு வந்தார்.

இட்லி சாப்பிடமுடியவில்லை
அதில் தன்னால் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை. 20 நிமிடங்கள் சேர்ந்தாற்போல் தூங்க முடியவில்லை என்றெல்லாம் கூறிவந்தார். தன்னை சுற்றி 27 மருத்துவர்கள் இருப்பதாகவும் தன்னை கீழே படுக்க வைத்து மூச்சுவிட கட்டாயப்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.

செயற்கை சுவாசம்
மேலும் அவர் செயற்கை சுவாசத்தின் வாயிலாக சுவாசித்து வருவதையும் கூறியிருந்தார். இதனால் நித்திக்கு என்னாச்சு என்ற கேள்வி எழுந்தது. அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார், இந்தியா வரபோகிறார், அவருக்கு கல்லீரலில் பிரச்சினை என்றெல்லாம் கூறப்பட்டது.

நித்தி பேஸ்புக்
இதையடுத்து நித்தி குறித்து பேஸ்புக்கில் எந்த போஸ்ட்டுகளும் கடந்த சில நாட்களாக இல்லை. இதனால் மீண்டும் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவின. இந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு ஒரு பேஸ்புக் பதிவை நித்தி வெளியிட்டிருந்தார். அதில் கைலாசாவாசிகளே, சமாதி நிலை 5 வகைப்படும்.

முதல் நிலை
அவற்றில் முதல் நிலை சுசுப்தி- இது ஆழ்ந்து தூங்கும் நிலை, 2. ஸ்வப்னா- கனவு நிலை, 3. ஜெக்ரத்- விழித்திருக்கும் நிலை, 4. துரியா- சுயநினைவு நிலையில் மகா கைலாசத்தை உணருதல், 5. துரியாதிதா- உயிருடன் இருக்கும் நிலை. நான் தொடர்ந்து துரியாதிதா நிலையில் இருந்து வருகிறேன்.

பிரார்த்தனைகள்
உங்களது பிரார்த்தனைகள் கைகூடியுள்ளது. தினந்தோறும் நித்ய சிவ பூஜையின் போது நான் ஜக்ரத் நிலை அதாவது விழித்திருக்கும் நிலையில் இருப்பேன். மேற்கண்ட 5 நிலைகளும் எனக்கு அவ்வப்போது ஏற்படுகின்றன. இதைத்தான் சகஜ சமாதி என்பார்கள். உங்களுக்கு ஒரு நற்செய்தி- என்னால் சரளமாக பேச முடிகிறது.

பேச்சு வந்துவிட்டது
நான் சமாதி நிலையில் இருந்த போது நடந்த அனைத்து சம்பவங்களும் என்னை சுற்றியிருந்தவர்களால் பதிவு செய்யப்பட்டன. சகஜ சமாதிக்கு வந்துவிட்டால் இனி நான் வழக்கமாக சத்சங்கங்களை நடத்துவேன். ஆன்மீக வகுப்புகளையும் மேற்கொள்வேன். அனைவருக்கும் நன்றி என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications