Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னும் 2 வருஷம்தான்..இந்திய ரோடுகள் அமெரிக்க ரோடு மாதிரி பளபளன்னு மாறும்..நிதின் கட்கரி சொல்கிறார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் சாலைகள் வரும் 2024ம் ஆண்டுக்குள் அமெரிக்க சாலைகளின் தரத்திற்கு மேம்படுத்தப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் 95வது ஆண்டு மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்த அமைச்சர் நிதின் கட்கரி இவ்வாறு கூறியுள்ளார்.

அதேபோல லாஜஸ்டிக்ஸ் செலவுகள் என்பது தற்போது 16 சதவிகிதம் இருப்பதாகவும், இனி வரும் காலங்களில் இதனை 9 சதவிகிதம் என ஒற்றை விகிதத்தில் குறைக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 எரிபொருள்

எரிபொருள்

இம்மாநாட்டில் வர்த்தகத்திற்கு பிரதானமாக இருக்கும் சாலை போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து பேசிய அமைச்சர், "இனி எதிர்காலம் பெட்ரோல், டீசலை நம்பி இருக்கப்போவதில்லை. பசுமை ஹைட்ரஜன்தான் இனி எதிர்காலம். இந்தியா இதனை ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் இருக்கிறது. விமானம், ரயில்வே என எல்லாவற்றிலும் இதுதான் எரிபொருளாக பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்தியாவில் இந்த பசுமை ஹைட்ரஜன் அதிக அளவில் கிடைக்கிறது. எனவே இனி வரும் நாட்களில் இந்தியா உலக அரங்கில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும். அதேபோல கட்டுமான துறைகளில் எஃகு பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டு வருகிறோம்.

கட்டுமானம்

கட்டுமானம்

அதற்கு பதில் மாற்று கருவிகளை பயன்படுத்துகிறோம். பொதுவாக கட்டுமான தொழிலில் சுற்றுச்சூழல் மாசு என்பது அதிகமாக இருக்கிறது. அதேபோல இதற்காக சிமெண்ட், எஃகு என உலகம் முழுவதும் 40 சதவிகிதமான வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே வளங்களை பாதுகாத்து கட்டுமான தரத்தினை மேம்படுத்துவதே எங்கள் நோக்கமாகும். ஆகவே சிமெண்ட் மற்றும் எஃகுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்த நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். இதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை சீரான பாதையில் தொடர்ந்து முன்னோக்கி பாய்ச்ச திட்டமிட்டிருக்கிறோம். இது அனைத்தும் சாத்தியப்படுமானால் 'நிலையான வளர்ச்சி இலக்குகள் 2030ஐ' இந்தியா அடையும்.

 ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

கட்டுமானம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆகியவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறத்தில் ஆட்டோமொபைல் துறையை காப்பாற்ற வேண்டிய இடத்திலும் நாம் இருக்கிறோம்" என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். மேலும், "மின்சாரம் மற்றும் மாற்று எரிசக்தியின் மூலம் ஆட்டோமொபைல் துறையை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். 2030ம் ஆண்டில் மின்சார வாகன போக்குவரத்து என்பது தவிர்க்க இயலாததாக மாறிவிடும். அப்படி இருக்கையில் அதற்கேற்றார் போல பேட்டரி வடிவமைப்புகளும் மாற்றம் பெறும். சில நாட்களுக்கு முன்னர் கனடிய நிறுவனம் ஒன்று எங்களை சந்திக்க வந்திருந்தது. அந்நிறுவனம் கோபால்ட் மற்றும் மாங்கனீசை கடலிலிருந்து பெறுவது தொடர்பாக எங்களுக்கு விளக்கியது.

கோபால்ட்

கோபால்ட்

கோபால்ட்டை மூலப் பொருட்களாக கொண்டு பேட்டரிகள் தயாரித்தால் பேட்டரிகளின் விலை கணிசமாக குறையும். தற்போது பேட்டரிகள் தொடர்பாக நிறைய ஆய்வுகள் நடந்து வருகின்றன. இன்றைய நிலவரப்படி ஆட்டோ மொபைல் துறை ரூ.7.5 லட்சம் கோடியாக இருக்கிறது. ஆனால், இனி வரும் காலங்களில் இதனை ரூ.15 லட்சம் கோடியாக உயர்த்த இருக்கிறோம். இதன் மூலம் ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும். மட்டுமல்லாது இந்த முயற்சிகள் இந்தியாவை உலக அளவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களில் ஒன்றாக மாற்றும்" என்று நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+