"20% எத்தனால் பெட்ரோல்.. நாட்டில் ஒரு கார் கூட பாதிக்கப்படவில்லை!" திட்டவட்டமாக சொன்ன நிதின் கட்கரி
டெல்லி: நாடு முழுக்க இப்போது விற்பனை செய்யப்படும் 20% எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களில் சில பாதிப்புகள் ஏற்படுவதாகவும், குறிப்பாக மைலேஜ் குறைவதாகவும் கடந்த சில நாட்களாகவே விமர்சனங்கள் அதிகரித்திருந்தது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார். எத்தனால் கலந்த பெட்ரோலால் நாட்டில் எந்தவொரு வாகனத்திலும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
நமது நாட்டில் பெட்ரோல் உடன் எத்தனால் கலந்து விற்பனை செய்யும் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. எத்தனால் அளவு மெல்ல அதிகரிக்கப்பட்ட நிலையில், இப்போது அது 20%ஆக உள்ளது. அதன்படி நீங்கள் வாங்கும் பெட்ரோலில் 80% பெட்ரோலும் 20% எத்தனாலும் தான் இருக்கிறது.

20% எத்தனால் கலந்த பெட்ரோல்
அதேநேரம் கடந்த சில காலமாகவே இதைச் சிலர் எதிர்த்து வருகிறார்கள். 20% எத்தனால் கலப்பதால் வண்டிகளில் பாதிப்பு ஏற்படுவதாகவும் மைலேஜ் குறைவதாகவும் அவர்கள் சொல்லி வந்தனர். இதற்கிடையே எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்துப் பயப்படத் தேவையில்லை என்றும் அதனால் எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கலந்து கொண்ட நிதின் கட்கரி, எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களுக்கு இதுவரை எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும் இது தொடர்பான வேண்டுமென்றே நெகடிவ் பிரச்சாரங்கள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
பாதிப்பு இல்லை
நிதின் கட்கரி மேலும் பேசுகையில், "20% எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தியதால், நாட்டில் எந்த ஒரு காருக்காவது பிரச்சனை ஏற்பட்டிருக்கிறதா? அப்படி ஒரு உதாரணத்தைச் சொல்லுங்கள்" என்று கேள்வி எழுப்பினார். இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் (SIAM) மற்றும் இந்திய ஆராய்ச்சி சங்கம் (ARAI) ஆகியவை எத்தனால் பயன்பாட்டை ஆதரிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
எத்தனால் கலப்பானது நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, பொருளாதார நன்மைகளைக் கொடுப்பதாகவும் இதனால் கார்பன் வெளியேற்றமும் குறைந்து சுற்றுச்சூழலுக்கு உதவுவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார். இது எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அதேநேரம், பருவநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடவும் உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிப்பு
நிதின் கட்கரி மேலும் கூறுகையில், "எத்தனால் உற்பத்தி விவசாயிகளுக்குப் புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. முன்பு ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ₹1,200-க்கு விற்கப்பட்டது. இப்போது அது எத்தனால் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால், ஒரு குவிண்டால் ₹2,600 வரை விற்கப்படுகிறது. இது கிராமப்புற விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது.
இந்தத் திட்டத்திற்கு எதிராகச் சிலர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இந்த விஷயங்கள் அனைத்தும் முறையாகச் சோதிக்கப்பட்ட பிறகே நாங்கள் அறிவிப்புகளை வெளியிடுகிறோம்" என்ற அவர் தெரிவித்தார்.
விளக்கம்
சமீபத்தில் தான் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்து பெட்ரோலிய துறை அமைச்சகமும் விளக்கமளித்திருந்தது. எத்தனால் கலந்த பெட்ரோலால் வண்டிகளில் பாதிப்பு ஏற்படும் என்பது ஆதாரமற்றவை மற்றும் அறிவியல் பூர்வமான சான்றுகள் அல்லது நிபுணர் ஆய்வுகளால் ஆதரிக்கப்படவில்லை என்று கூறப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் தான் நிதின் கட்கரியும் கூட அது பாதுகாப்பானது என்று உறுதியளித்துள்ளார்.
-
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications