Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர்! நாட்டில் எல்லா சுங்கச்சாவடிகளும் நீக்கப்படும்! நிதின் கட்கரி பேச்சு! கடைசியில் ஒரு ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூல் முறையை எளிமையாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், லோக்சபா தேர்தலுக்கு முன்பு சுங்க சாவடிகள் அனைத்தும் நீக்கப்படும் நிதின் கட்கரி அறிவித்து இருந்தார். அது எப்படி சாத்தியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்,

இரு முக்கிய நகரங்களுக்கு இடையே வேகமாகச் சென்று வர அமைக்கப்பட்டது தான் நெடுஞ்சாலைகள். இந்த நெடுஞ்சாலைகளைத் தனியார் நிறுவனங்கள் பராமரிக்கும் நிலையில், அதைப் பயன்படுத்தும் போது நாம் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும்.

Nitin Gadkari says Toll plazas will be vanished before 2024 Lok Sabha election How is it possible

இதற்கு முன்பு வரை சுங்கச்சாவடிகளில் வரிசையில் நின்று சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையே இருந்தது. வார இறுதி மற்றும் பண்டிகை காலங்களில் இந்த சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் இருக்கும்.

சுங்கச்சாவடிகள் நீக்கம்: ஃபாஸ்ட் டேக் வருகை இந்த நிலையை மாற்றி இருக்கிறது என்றே சொல்லலாம். நெடுஞ்சாலையில் மக்கள் பயணிக்கும் விதத்தில் ஃபாஸ்ட் டேக் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். ஃபாஸ்ட் டேக் வந்த பிறகே சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை முடிவுக்கு வந்தது. சில நொடிகளில் நாம் சுங்கச்சாவடிகளைத் தாண்டி செல்லும் நிலை உருவாகி இருக்கிறது. இது நெடுஞ்சாலைத் துறை செய்த மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், இத்துடன் நிற்காமல் அடுத்த செயற்கைக்கோள் அடிப்படையிலான ஜிபிஎஸ் கட்டண வசூல் சிஸ்டத்தை உருவாக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இது தொடர்பாக ராஜ்யசபாவில் பேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, "இந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன் சாட்டிலைட் அடிப்படையிலான சுங்கச்சாவடி கட்டண முறை அமல்படுத்தப்படும்.. இதுநாள் 8.13 கோடி ஃபாஸ்ட் டேக்குகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தினசரி சராசரியாக வசூல் 170 முதல் 180 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டும்" என்று அவர் தெரிவித்தார்.

எப்படி சாத்தியம்: மத்திய அரசு கொண்டு வரும் இது குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.. இந்த முறையில் வாகனங்களில் நம்பர் பிளேட் வங்கிக்கணக்கில் இணைக்கப்படும். அந்த வாகனங்களின் ஜிபிஎஸ் மூலம் சுங்க சாலையைப் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்டறிந்து பிறகு நேரடியாக வங்கிக் கணக்குகளில் இருந்து கட்டணம் பிடிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

ஜிபிஎஸ் மூலம் கட்டண வசூல் இருக்கும் என்பதால் இந்த புதிய சிஸ்டத்தின் கீழ் நாடு முழுக்க இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பதை எளிதாக்க இந்த முறை உதவும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். சுங்கச்சாவடிகள் இருக்காது என்பதால் நேரம் மிச்சப்படுத்தப்படும். இந்த முறையை வெற்றிகரமாக அமல்படுத்த ஒரு ஆலோசகரை நியமிக்க உள்ளதாகவும் நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.

ஃபாஸ்ட் டேக்: முதற்கட்டமாக இப்போது ஃபாஸ்ட் டேக்குகள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் சில நெடுஞ்சாலைகளில் சோதனை அடிப்படையில் இந்த முறையில் வசூலிக்க நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. இது வெற்றிகரமாக இருக்கும்பட்சத்தில் அடுத்தகட்டமாக இதை நாடு முழுக்க இருக்கும் நெடுஞ்சாலைகளில் அமல்படுத்துவதே மத்திய அரசின் திட்டமாகும். லோக்சபா தேர்தல் ஆரம்பிக்கும் முன்பு இத்திட்டத்தைச் செயல்படுத்தவே மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க தற்போதுள்ள ஃபாஸ்ட் டேக் முறையில் இருக்கும் பிரச்சினைகளையும் மத்திய அரசு சரி செய்ய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரே ஃபாஸ்ட் டேக் கணக்குகள் பல வாகனங்களுக்குப் பயன்படுத்த உள்ளதாகவும்.. ஒரே வாகனத்தில் பல ஃபாஸ்ட் டேக்குகள் இருப்பதாலும் அதைத் தடுக்க கேஒய்சியை கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டது.. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும் அது விரைவில் முடியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+