மிரட்டும் ஜே.என்.1 கொரோனா.. கூடுதல் டோஸ் தடுப்பூசி அவசியமா? மூத்த மருத்துவர் என். அரோரா விளக்கம்
டெல்லி: கொரோனாவின் துணை மாறுபாடு வகையான ஜே.என்.1 வகை வைரஸ் காரணமாக தொற்று பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசியின் கூடுதல் டோஸ் அவசியமா என்பது குறித்து கோவிட் பேனல் குழுவின் என்.கே ஆரோரா விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அடுத்த சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவியது. கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திண்டாடின. பொது முடக்கம், பயணக் கட்டுப்பாடுகள் ஆகியைவை அமல்படுத்தப்பட்டதோடு, இதனால், பொருளாதார ரீதியாகவும் கடுமையான பாதிப்பை உலகம் முழுவதும் கொரோனா ஏற்படுத்தியது.

உலகம் முழுவதும் பல கோடி பேரை தாக்கிய கொரோனா தடு்ப்பூசி கண்டுபிடித்த பிறகு சற்று ஓயத்தொடங்கியது. இடையில் அவ்வப்போது உருமாறிய கொரோனா பரவினாலும் அதன் தாக்கம் அவ்வளவாக இல்லை. அதன்பிறகு கொரோனாவையே மக்கள் கிட்டத்தட்ட மறக்கத் தொடங்கிவிட்டனர். சமூக இடைவெளி, சானிடைசர் பயன்பாடு தற்போது பெருமளவு குறைந்து விட்டது.
தமிழகத்தில் 100ஐ கடந்த பாதிப்பு: இந்த நிலையில், மீண்டும் பயம் காட்ட தொடங்கியிருக்கிறது கொரோனா. இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் வாரத்தில் சிங்கப்பூரில் ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து, கேரளாவில் கடந்த 14-ந்தேதி ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கேரளாவில் கொரோனா பாதித்தவர்களின் மாதிரியை பரிசோதனை செய்தபோது அது 'ஜே.என்.- 1' என்ற உறுமாறிய புதுவகை கொரோனா என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இப்படியாக தமிழகத்திலும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பின் வேகம் திடீரென அதிகரித்து வருகிறது. ஓரிரு நபர்களுக்கு மட்டுமே பதிவாகி வந்த கொரோனா தற்போது கிடுகிடுவென உயர்ந்து 100-ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில், இன்று மட்டும் தமிழகத்தில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் அண்டை மாநிலமான கேரளாவில் 424 ஆக பதிவாகியுள்ளது.
ஒரே நாளில் 655 பேருக்கு தொற்று: இந்தியாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 655 ஆக உள்ளது. இதனால் இந்தியாவில் தற்போது கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 3742ஐ தொட்டுள்ளது. மீண்டும் இந்தியாவில் கொரோனா வேகமெடுக்கும் நிலையில், மீண்டும் சுகாதார கட்டுப்பாடுகள் வருமோ என்றும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கொரோனாவின் துணை மாறுபாடு வகையான ஜே.என்.1 வகை வைரஸ் காரணமாகவே தொற்று பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், ஏற்கனவே 2 கொரோனா தடுப்பூசிகள் பலரும் போட்டிருக்கும் சூழலில், தற்போது பரவும் ஜே என் 1 வகை கொரோனா வைரசுக்காக, கொரோனா தடுப்பூசியின் கூடுதல் டோஸ் அவசியமா என்பது குறித்து கோவிட் பேனல் குழுவின் என்.கே ஆரோரா விளக்கம் அளித்துள்ளார்.
கூடுதல் தடுப்பூசி தேவையா?: கோவிட் பேனல் குழுவின் (INSACOG) தலைவரும் மூத்த மருத்துவருமான என்.ஆரோரா கூறியதாவது:- தற்போதைய சூழலை பற்றி சொல்வது என்றால், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் இணை நோய் உள்ளவர்களும் கூடுதல் முன்னெச்சரிக்கை அவசியம். இதுவரை முன்னெச்சரிக்கை எடுக்க வில்லை என்றாலும் முன்னெச்சரிக்கை எடுத்துக்கொள்வது நல்லது. இதைத்தவிர கூடுதல் டோஸ் தடுப்பூசிகள் எதுவும் தேவையில்லை.
புதிய வகை கொரோனா வேகமாக பரவுதற்கான சான்று எதுவும் இல்லை. ஜே.என்.1 வைரைஸ் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. அறிகுறிகளும் ஒரே மாதிரியானவைதான். அறிகுறிகளை வைத்து பார்த்தோம் என்றால் பிற வேரியண்ட்களில் இருந்து ஜே என்1 ஐ வேறுபடுத்தி பார்க்க முடியாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை. எனவே, பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை. எனினும் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications