டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஷ்ஷ்".. ராணுவ ரகசியம்.. விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கேள்வி கேட்டதுமே.. பறந்து வந்த பதில் இதான்

விழுப்புரம் எம்பி ரவிக்குமாருக்கு மத்திய பாதுகாப்பு துறை பதிலளித்துள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: சீன ராணுவம் நம்முடைய எல்லைக்குள் குவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.. ஆனால், ரவிக்குமாருக்கு, மத்திய அரசு தந்த பதிலை பாருங்க.

நாளுக்கு நாள் சீனா எல்லை பிரச்சனை அதிகமாகி கொண்டே போகிறது.. எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இதுவரை ஒரு சுமூக எட்டப்படவில்லை. எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் சீனா உடன்பட மறுப்பு சொல்லி வருகிறது.

இதுஒருபுறம் என்றால், சர்ச்சைக்குரிய பகுதிகளில் சாலைகள் அமைத்தல், ராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், பாலங்கள் அமைத்தல் இப்படி பல அத்துமீறல்களையும் சீனா செய்து வருவதாக கூறப்படுகிறது.

 No, cannot explain china issue due to military secrecy, defense ministry replies to mp ravikumar

டோக்லாமில் ஜம்பேரி மேடு வரையிலான சீன படைகளின் குவிப்பு, நம் நாட்டின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது.. வடகிழக்கு மாநிலங்களுக்கான நுழைவாயிலாக சிலிகுரி வழித்தடத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் உள்ளது... தேசிய பாதுகாப்பு என்னாகுமோ என்ற கவலையும் இது தொடர்பாக எழுந்து வருகிறது. இந்த எல்லை பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட வேண்டும், சீனாவின் ஊடுருவல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தல்கள் தொடர்ந்து வந்தன.. ஆனால், இதுவரை விவாதம் எதுவுமே இதுகுறித்து நடத்தப்படாமலேயே உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதில், எல்லையை காக்க நம்முடைய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று கேட்டார்.. ரவிக்குமாரின் கேள்விக்கு, மத்தியஅரசின் பாதுகாப்பு அமைச்சகம் எழுத்துபூர்வமான பதில் சொல்லி உள்ளது.. அந்த பதிலில், இந்த இந்தத் தகவல் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.. அதனால், இது ராணுவ ரகசியம் ஆகும்" என்று தெரிவித்துள்ளது.

இதை பற்றி ரவிக்குமார் சொல்லும்போது, "சீன ராணுவம் நம்முடைய நாட்டுக்குள் நுழைந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் நிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.. மேலும் பல்லாயிரக்கணக்கான துருப்புகளையும் நிலைநிறுத்தி வைத்திருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.. அதுகுறித்த உண்மை நிலையை ஒன்றிய அரசு தெரிவிக்க மறுப்பதை பார்த்தால், அந்த செய்திகளை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

வெடித்த சீன விவகாரம்.. பதிலே இல்லை.. குளிர்கால கூட்டத் தொடரை சீக்கிரமே முடித்துக்கொள்ள அரசு முடிவு வெடித்த சீன விவகாரம்.. பதிலே இல்லை.. குளிர்கால கூட்டத் தொடரை சீக்கிரமே முடித்துக்கொள்ள அரசு முடிவு

English summary
No, cannot explain china issue due to military secrecy, defense ministry replies to mp ravikumar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X