இருமல் சிரப் இனி குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.. மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுரை
டெல்லி: மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப்பை குடித்த 11 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் 2 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இருமல் சிரப்பை வழங்க கூடாது என்று மத்திய அரசு சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 2 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இருமல் சிரப் வழங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்த 11 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் இருமல் சிரப் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. இருமல் சிரப்பில் உடலுக்கு தேவையற்ற கெமிக்கல் கலக்கப்பட்டு இருந்தது தான் குழந்தைகள் இறப்புக்கு முக்கிய காரணம் என்ற தகவல் பரவ தொடங்கியது.

இந்நிலையில் தான் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளது. மத்திய அரசின் சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம் (Directorate General of Health Services or DGHS) சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் வழங்க கூடாது. பொதுவாக 5 மற்றும் அதற்கு உட்பட்ட வயதினருக்கு இருமல், சளி சிரப் பரிந்துரைக்கப்படுவது இல்லை. இதனால் இருமல் சிரப் விவகாரத்தில் மருத்துவர்களின் பரிந்துரைகளை பின்பற்றுவது பற்றி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது கடந்த 2 வாரத்தில் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 9 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் பலியாகின. அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்திலும் கடந்த சில நாட்களில் 2 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் பலியாகின. இந்த 2 மாநிலங்களும் அண்டை மாநிலங்களாக உள்ளன. இதில் பெரும்பாலான குழந்தைகள் இருமல் சிரப் குடித்தவர்கள். 5 குழந்தைகள் Coldref, ஒரு குழந்தை Nextro சிரப்பை பயன்படுத்தி உள்ளது. இதனால் அவர்களின் உயிரிழப்புக்கு இருமல் சிரப் தான் முக்கிய காரணம் என்ற தகவல் பரவியது.
இதனால் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் ஹைட்ரோபுரோமைடு சிரப் தொகுதிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருமல் சிரப்புகள் கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கும் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அல்லது எத்திலீன் கிளைக்கால் (EG) உள்ளிட்டவை இல்லை என்பதை சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக சளி, காய்ச்சல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட 1,420 குழந்தைகளின் வரிசைப் பட்டியல் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இப்படியான சூழலில் தான் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப்புகள் வழங்கவே கூடாது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பொதுவாகவே சிரப்புகள் பரிந்துரை செய்யப்படுவது இல்லை. இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications