சுவிஸ் வங்கியில் இந்தியர் முதலீடு எவ்வளவு? அதிகாரப்பூர்வ டேட்டா இல்லை: நிர்மலா சீதாராமன் கைவிரிப்பு
டெல்லி: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் குறித்த அதிகாரப்பூர்வ மதிப்பீட்டு தரவுகள் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்கும் வகையில் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்வதாக கூறப்படுகிறது.
இவ்வாறு இந்திய தொழில்அதிபர்கள், அரசியல்வாதிகள் என ஏராளமானவர்கள் சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் சேர்த்திருப்பதாக குற்றச்சாட்டுகள் இன்றும் உள்ளது.
இந்நிலையில் தான் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பாஜக சுவிஸ் வங்கிகளின் கருப்பு பணம் விவகாரத்தை கையில் எடுத்தது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்பட்டது.

நிர்மலா சீதாராமன் பதில்
இந்நிலையில் தான் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணத்தின் அளவு குறித்து நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில் "இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்த பணத்தின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் இல்லை. இருப்பினும், 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் நிதி உயர்ந்துள்ளதாக சில ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இந்த முதலீடுகள் கருப்பு பணம் என குறிப்பிடப்படவில்லை. மேலும் ஊடக அறிக்கைகள் புள்ளிவிபரங்களோடு எதையும் விளக்கவில்லை'' என கூறினார்.

வரி-அபராதம் விதிப்பு
மேலும், ‛‛ அரசின் பல்வேறு நடவடிக்கையின் அடிப்படையில் மே 31, 2022 நிலவரப்படி, எச்எஸ்பிசி வழக்குகளின் கீழ் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் செய்யப்பட்ட டெபாசிட்கள் மூலம் ரூ.8,468 கோடிக்கும் அதிமான வருமானவரியும், ரூ. 1,294 கோடிக்கு மேல் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, கருப்புப் பணம் மற்றும் வரி விதிப்புச் சட்டம், 2015 ஆகியவற்றின் கீழ் மதிப்பீடுகள் 368 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.14,820 கோடிக்கு மேல் வரி கோரப்பட்டுள்ள நிலையில் ரூ.1,294 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது'' என கூறியுள்ளார்'' என்றார்.

இந்தியர்களின் முதலீடு அதிகரிப்பு
இதற்கிடையே சமீபத்தில் சுவிஸ் வங்கி வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்திய முதலீடு தொடர்பான தகவல்கள் வெளியாகின. அதனடிப்படையில் கடந்த ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு என்பது ரூ.30,500 கோடியாக இருந்தது. 2020ல் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கியில் ரூ.20, 700 கோடியாக மட்டுமே இருந்த நிலையில் ஒரு ஆண்டில் 10,000 ஆயிரம் கோடி அதிகரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

14 ஆண்டுகளில் இல்லாத அளவு
மேலும் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் சேமிப்பு கணக்குகள் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4,800 கோடி உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுதவிர ஒரே ஆண்டில் மட்டும் 50 சதவீதத்திற்கு அதிகமாக இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும், இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொகை எனவும் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications