140 கிமீ வேகம் - டீசல், மின்சாரம் வேண்டாம்! சோதனை ஓட்டத்துக்கு தயாரான ஹைட்ரஜன் ரயில்! மாஸ் அப்டேட்
டெல்லி: சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள ஹைட்ரஜன் ரயில் நம் நாட்டிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த ஹைட்ரஜன் ரயிலின் வேகம், வழித்தடம் குறித்த பல்வேறு முக்கிய விஷயங்கள் வெளியாகி உள்ளன.
ரயில்வே துறையில் மத்திய அரசு தொடர்ந்து பல மாற்றங்களை செய்து வருகிறது. இதற்கு உதாரணமாக ரயில் நிலையங்கள் நவீனமயாக்கப்படுவதையும், ‛வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்படுவதையும் கூறலாம். இதற்கு அடுத்தக்கட்டமாக மத்திய ரயில்வே துறை கையில் எடுத்துள்ள திட்டம் தான் ஹைட்ரஜன் ரயில்.

அதாவது முதலில் ரயில்கள் நீராவியில் இயக்கப்பட்டது. அதன் பிறகு நிலக்கரி, டீசல், தற்போது மின்சாரத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நீராவி, நிலக்கரி, டீசல் உள்ளிட்டவற்றில் ரயில்களை இயக்கும்போது மாசு என்பது அதிகரிக்கும். அதேபோல் மின்சாரத்தில் ரயில்கள் இயக்கப்பட்டாலும் கூட மின்சாரத்துக்கு நிலக்கரி எரிக்கப்பட்டு காற்று மாசு ஏற்படுகிறது.
இதனால் இந்திய ரயில்வேயில் மாசை குறைக்கும் வகையில் ஹைட்ரஜன் ரயில் திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது. ஹைட்ரஜன் ரயில் இயக்குவதன் மூலம் காற்று மாசு குறையும். இந்த ரயில்கள் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளது. தற்போது இந்தியாவும் முதல் முறையாக ஹைட்ரஜன் ரயில் சேவையை தொடங்க உள்ளது. ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணியை சென்னையில் ஐசிஎப் தொழிற்சாலை ஒருங்கிணைக்க தொடங்கி பணிகள் முடிந்துள்ளன.
அடுத்த மாதம் (டிசம்பர்) சோதனை ஓட்டம் என்பது நடைபெற உள்ளது. இது ஒரு சோதனை முயற்சியாக நடைபெற உள்ளது.
வடக்கு ரயில்வேயின் டெல்லி பிராந்தியத்தில் ஹரியானா மாநிலத்தில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. அதாவது ஹரியானாவில் உள்ள ஜிந்த் - சோனிபட் ஆகிய நகரங்கள் இடையே இடையே 89 கிலோமீட்டர் தொலைவுக்கு முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் தான் அடுத்த மாதம் சோதனை ஓட்டம் என்பது நடைபெற உள்ளது.
இந்த முதல் ஹைட்ரஜன் ரயிலுக்கு ஜிந்த் நகரில் உள்ள 1 மெகாவாட் பாலிமர் எலக்ட்ரேலைட் மெம்பரேன் எலக்ட்ரோலைசர் ரயிலுக்கு தேவையான ஹைட்ரஜனை வழங்கும். இங்கு 3,000 கிலோ வரை ஹைட்ரஜனை சேமித்து வைக்க முடியும். இந்தியாவை பொறுத்தவரை ஹைட்ரஜன் ரயில் திட்டம் ரூ.2800 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு ரயில் தயாரிக்க ரூ.80 கோடி வரை செலவு செய்யப்படுகிறது. ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு மையங்களுக்காக ரூ.600 கோடி செலவிடப்படுகிறது.
அதாவது Fuel Cells பயன்படுத்தி ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலம் மின்சாரம் உருவாக்கப்பட்டு ரயில் இயக்கப்படும். இதன் மூலம் நீராவி மற்றும் தண்ணீர் மட்டுமே கிடைக்கும். இது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. ஆனாலும் கூட இந்த ரயில் இயங்க ஒரு மணிநேரத்துக்கு 40 ஆயிரம் லிட்டர் வரை கிடைக்கும். இதனால் ரயிலில் தண்ணீர் சேமிப்புக்கு என்று தனி செட்அப் அமைக்கப்பட உள்ளது.
அதன்பிறகு ஹைட்ரஜன் ரயில் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே 35 ஹெரிடேஜ் ரயில்களை உருவாக்கும். அதாவது பாரம்பரியமான இடங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் இந்த ரயில்கள் இயக்கப்படும். ஹைட்ரஜன் ரயில் என்பது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது. இந்திய ரயில்வேயை பொறுத்தவரை 2030ம் ஆண்டக்குள் ‛ஜீரோ கார்பன்' வெளியீடு என்ற இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு ஹைட்ரஜன் ரயில் பெரும் பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் சோதனை ஓட்டமாக இயங்கும் ரயில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும். அதன்பிறகு பிற வழித்தடங்களில் ரயில்கள் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும். இந்த ரயில் ‛சிங்கிள் ரன்' முறையில் ஒரே நேரத்தில் 1000 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications