போட்டி தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மேஜர் சலுகை..காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற அறிவிப்பு
டெல்லி: மத்திய அரசு பணிகளில் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் போட்டி தேர்வுகளுக்கான கட்டணம் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்ட தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளது. கடைசியாக 7வது கட்ட தேர்தல் ஜுன் 1ம் தேதி நடக்கிறது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மத்தியில் இரண்டு முறை தொடந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஓரணியில் திரண்டுள்ளன.

பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிர பிரசாரத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியானது. அதில் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெற்று இருந்தது. அதாவது, உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு கல்விக் கடன் ரூ.7.5 லட்சம் வரை வழங்கப்படும்.
மிகவும் ஏழைகளாக உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம். 2025 முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவிதம் ஒதுக்கப்படும். புதுவை மற்றும் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்விக் கடன்களும் ரத்து செய்யப்படும். 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு சட்ட ரீதியாக உறுதி செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிரக அறிவிப்புகள் உள்ளன.
விண்ணப்ப கட்டணம் கிடையாது: அதேபோல், போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களுக்கான கட்டணம் எதுவும் கிடையாது என்ற வாக்குறுதியும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. மத்திய, மாநில அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் என வசூலிக்கப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம் செலுத்தாத விண்ணப்பதார்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. சராசரியாக 500 ரூபாய் என்ற அளவுக்கு விண்ணப்ப கட்டணம் உள்ளது. அரசு விதிகளின் படி விண்ணப்ப கட்டணம் சில பிரிவினருக்கு அளிக்கப்பட்டாலும் பொதுவாக அனைவருக்குமே விண்ணப்ப கட்டணம் இல்லாமல் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை போட்டித்தேர்வர்கள் மத்தியில் உள்ளது.
வேலை இல்லாமல் கஷ்டப்படும் சூழலில் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதும் சிரமமாக இருக்கிறது என்பது தேர்வர்களின் வாதம்.. இந்த நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், அரசுத்தேர்வுகளுக்கான விண்ணப்ப கட்டணம் ரத்து என்ற வாக்குறுதி இடம் பெற்றுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications