டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லை மோதல்: இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்யும் திட்டம் இல்லை- அமெரிக்கா திட்டவட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா மற்றும் சீனா இடையேயான மோதல் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தத்துக்கு அமெரிக்கா தயார் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 முறை தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய அரசு இதனை திட்ட வட்டமாக நிராகரித்துவிட்டது.

No Formal Plans, Says White House on Mediating India-China Issue

இந்தியா- பாகிஸ்தான் பிரச்சனையில் 3-வது நாட்டின் தலையீட்டை அனுமதிப்பது இல்லை என்பது இந்தியாவின் கொள்கை. இந்த நிலையில் லடாக்கின் கிழக்கில் அத்துமீறி சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

சீனா தரப்பில் 43 பேர் பலியாகினர். 1975-ம் ஆண்டு இந்தியா- சீனா யுத்தத்துக்குப் பின்னர் இருநாடுகளிடையே நிகழ்ந்த மிகப் பெரும் மோதல். ஆகையால் உலக நாடுகள் இந்த மோதல் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

இந்தியாவுடன் மோதல்- சீனா ஆலோசகர் யங் ஜெயச்சியை சந்திக்கிறார் அமெரிக்கா அமைச்சர் மைக் பாம்பியோஇந்தியாவுடன் மோதல்- சீனா ஆலோசகர் யங் ஜெயச்சியை சந்திக்கிறார் அமெரிக்கா அமைச்சர் மைக் பாம்பியோ

இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் மெக்கெனானி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியா -சீனா மோதல் தொடர்பான கேள்விக்கு மெக்கெனானி அளித்த பதில்:

Recommended Video

    India-China border : இந்தியாவிடம் உறவாடி முதுகில் குத்தும் சீனா..நேரு முதல் மோடி வரை - முழு விபரம்

    இந்தியா-சீனா மோதல் நிலைமை, உயிரிழப்புகள் குறித்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் நன்கு அறிவார். இந்த நிலைமைகளை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. உயிரிழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொள்கிறோம்.

    கடந்த ஜூன் 2-ந் தேதியன்று இந்திய பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப், தொலைபேசியில் உரையாடினார். அப்போது சீனாவுடனான எல்லை பிரச்சனை குறித்தும் விவாதிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியா-சீனா இடையே மத்தியஸ்தம் செய்யும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இல்லை . இவ்வாறு மெக்கெனானி கூறினார்.

    English summary
    The White House on Wednesday said there were no formal plans when asked if United States President Donald Trump would mediate between India and China on the border issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X