பொதுசிவில் சட்டம்- சட்ட ஆணையம் ஆய்வு செய்து வருகிறது... டெல்லி ஹைகோர்ட்டில் மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சட்ட ஆணையம் ஆய்வு செய்து வருகிறது; தற்போதைய நிலையில் பொது சிவில் சட்டத்தை உடனே கொண்டுவரும் நடவடிக்கை எதுவும் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பொதுசிவில் சட்டம் என்பது பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் தவறாமல் இடம்பெறக் கூடிய ஒன்று. பொது சிவில் சட்டம், குடியுரிமை சட்ட திருத்தம், ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவு ரத்து ஆகியவை பாஜகவின் பிரதான கொள்கைகள்.

டெல்லி பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாய், டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுசிவில் சட்டம் தொடர்பாக ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தேச ஒற்றுமையை பாதுகாக்க, பெண்களின் கெளரவத்தைப் பாதுகாக்க, பெண்களுக்கு நியாயம், நீதி கிடைக்கவும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மத்திய அரசு பதில்

மத்திய அரசு பதில்

இந்த மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதேபோல் பொது சிவில் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வலியுறுத்தி மேலும் சில பொதுநலன் வழக்குகளும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்களுக்கு மத்திய அரசு தாக்கல் செய்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பல்வேறு மதங்களை பின்பற்றுகிறவர்கள் நமது நாட்டில் உள்ளனர். இதனால் பல்வேறு திருமணம், சொத்து உரிமை சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

நம்பிக்கைகள் சார்ந்தது

நம்பிக்கைகள் சார்ந்தது

இத்தகைய நடைமுறை நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது. பொது சிவில் சட்டம் என்பது நாட்டின் ஒற்றுமைக்கானது. இந்த விவகாரம் சிக்கலானது மட்டுமல்ல மத நம்பிக்கைகள் தொடர்புடையதும் கூட.

சட்ட ஆணையம் ஆய்வு

சட்ட ஆணையம் ஆய்வு

பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் குழு ஆய்வு செய்து வருகிறது. தற்போதைக்கு பொதுசிவில் சட்டத்தை உடனே கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. பொது சிவில் சட்டம் உருவாக்குவது குறித்து ஆய்வு செய்யப்படும்.

நாடாளுமன்றத்தில்தான் சட்டம்

நாடாளுமன்றத்தில்தான் சட்டம்

சட்டங்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றம்தான் கொண்டு வரமுடியும். நாடாளுமன்றத்துக்கு வெளியேயான ஒரு அமைப்பால் சட்டங்களை நிறைவேற்ற உத்தரவிட முடியாது. இவ்வாறு மத்திய அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+