அம்பானி ஜியோவிற்கு சிக்கல்.. அலைக்கற்றை இனி ஏலம் விடப்படாது! இந்திய மார்கெட்டிற்கு வரும் எலான் மஸ்க்
டெல்லி; இந்தியாவில் அலைக்கற்றையை ஏலம் விடுவது.. அல்லது மக்கள் பயன்பாட்டிற்கு புதிய அலைக்கற்றை பிரிவை கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் இருந்தே இதில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. அந்த ஏலத்தில் முறைகேடு என்று சொல்லி.. அது நாட்டையே உலுக்கி.. கடைசியில் எந்த முறைகேடும் இல்லை என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பும் அளித்தது. இப்படி அலைக்கற்றை விற்பனை என்பது இந்தியாவில் சர்ச்சைக்குரிய ஒரு விஷயம்தான். அந்த வகையில்தான் தற்போது அலைக்கற்றை ஏலம் இனி நடக்காது என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் இதனால் இந்தியாவில் அலைக்கற்றை வாங்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் இந்த முடிவு காரணமாக இந்தியாவை சேர்ந்த ஜியோ, ஏர்டெல், விஐ போன்ற நிறுவனங்களுக்கு பெரிய பின்னடைவது ஏற்பட்டு உள்ளன. அலைக்கற்றை நிர்வாக ரீதியாக ஒதுக்கீடு செய்யப்படும். இந்த முறை அலைக்கற்றை ஏலம் விடப்படாது என்று அறிவித்து உள்ளனர்.

இந்திய கோடீஸ்வரர்கள் ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் ஆகியோர் செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீட்டை எப்போதும் போல ஏலம் முறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் இந்திய மார்க்கெட்டில் நுழைய தீவிரமாக முயன்று வரும் எலான் மஸ்க் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு யாருக்கு சாதகமாக முடிவு எடுக்க போகிறது என்ற கேள்வி நிலவிய நிலையில்தான்.. அலைக்கற்றை ஏலம் இனி நடக்காது என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கிற்கு சாதகமாக இந்த முடிவு அமைந்துள்ளது.
அலைக்கற்றையானது குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு.. நிர்வாக அடிப்படையில் விற்பனை செய்யப்படும் . டிராய் இதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும். உலகம் முழுக்க அலைக்கற்றை எங்கும் ஏலம் விடப்படுவது இல்லை. நிர்வாக அடிப்படையிலேயே அலைக்கற்றை அளிக்கப்படுகிறது. இதை சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் எனப்படும் International Telecommunications Union (ITU) கண்காணிக்கிறது. அந்த வகையில் இந்தியாவிலும் அதே முறையை பின்பற்றி நிர்வாக அடிப்படையில் அலைக்கற்றையை வழங்குவோம்.
International Telecommunications Union (ITU) எனப்படும் சர்வதேச தொலைத்தொடர்பு யூனியனில் இந்தியாவும் ஒரு மெம்பர். இதனால் அவர்களின் விதிகளை கடைபிடிப்பது இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும். இந்தியாவின் இந்த முடிவை எலான் மஸ்கின் ஸ்டார் லிங்க் மற்றும் அமேசானின் Project Kuiper ஆகியவை ஆதரித்து உள்ளன.
வெளிநாட்டு நிறுவனங்கள் இதனால் இந்தியாவில் அலைக்கற்றை வாங்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் இந்தியாவில் மோனோபோலி செய்யும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் ஆகியோர் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து உள்ளனர்.
ஏலம் மூலம் அலைக்கற்றை விற்கப்பட்டால் மட்டுமே.. ஒரு நாட்டில் உள்ள நிறுவனங்கள் சமமாக போட்டியிட முடியும். நிர்வாக ரீதியாக கொடுக்கப்பட்டால் அதில் முறைகேடு நடக்கப்படலாம். இதன் காரணமாகவே ஜியோ, ஏர்டெல் இதை கடுமையாக எதிர்த்தது. பிரதமர் மோடி பங்கேற்ற சமீபத்திய கூட்டம் ஒன்றில்கூட ஏர்டெல் நிறுவனம் இதை வெளிப்படையாக தெரிவித்து இருந்தது. அதன் தலைவர் மிட்டல் இதை பற்றி வெளிப்படையாக பேசி இருந்தார்.
அதே சமயம் இந்தியாவின் அலைக்கற்றை ஏலம் முறை என்பது மிக மிக தவறானது. எந்த நாட்டிலும் இது இல்லை என்று எலான் மஸ்க் விமர்சனம் செய்து இருந்தார். ஆனால் இந்த புதிய முடிவால் அலைக்கற்றை இலவசமாக விற்கப்படாது. அலைக்கற்றையானது குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு.. நிர்வாக அடிப்படையில் விற்பனை செய்யப்படும் .
இந்தியாவில் அலைக்கற்றை மூலம் சேவை வழங்க ஏற்கனவே ஸ்டார் லிங்க் விண்ணப்பம் செய்து உள்ளது. இதில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இந்தியாவின் இந்த முடிவை தொடர்ந்து promising.. அதாவது நம்பிக்கை அளிக்கிறது என்று எலான் ,மஸ்க் போஸ்ட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications