Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹேப்பி நியூஸ்.. கொரோனா இல்லா மாநிலமானது கோவா.. நாடு முழுக்க 59 மாவட்டங்களில் கொரோனா இல்லை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 1,553 புதிய கொரோனா நோயாளிகள், கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளதாகவும், 36 பேர் பலியானதாகவும், இதுவரை 2,546 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால், இதுபற்றி கூறியதாவது: நேற்று முதல் 1553 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளன. நாட்டின் மொத்த கொரோனா நோயாளி எண்ணிக்கை, 17265 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 36 இறப்புகளும் பதிவாகியுள்ளன. மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வருகை தந்து சுகாதார ஊழியர்களின் பங்களிப்பை பாராட்டினார்.

No New coronavirus case in 59 Districts in Past 14 Days

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இப்போது 7.5 நாட்களில் இரட்டிப்பாகின்றன, முன்பு கொரோனா பாதிப்பு 3.5 நாட்களில் இரட்டிப்பாகியது. 59 மாவட்டங்களில், கடந்த 14 நாட்களில் ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை.

புதுச்சேரியில் உள்ள மாஹே, கர்நாடகாவின் குடகு மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் பவுரி கர்வால் ஆகிய இடங்களில் கடந்த 28 நாட்களில் ஒரு கொரோனா பாதிப்பும் பதிவாகவில்லை என்று அவர் கூறினார். கடந்த 14 நாட்களில், கொரோனா பதிவு செய்யப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. கோவாவில் இப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Recommended Video

    கொரோனாவுக்கு பிறகு இந்தியாவை புனரமைப்பது எப்படி? கமல் வெளியிட்ட அறிக்கை

    ஐ.சி.எம்.ஆரின் ரத்தன் கங்கா கேட்கர் கூறுகையில், ஆர்டி-பி.சி.ஆர் கிட் வேலை செய்யவில்லை என்று மேற்கு வங்கத்திலிருந்து எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. அதுகுறித்து ஆய்வு நடத்தி வருகிறோம் என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+