சோனியா காந்தி தலைமையை மாற்ற வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை- குலாம் நபி ஆசாத் திடீர் பல்டி!
டெல்லி: சட்டசபை தேர்தல்கள் தோல்விக்காக சோனியா காந்தி பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிருப்தியாளர்கள் குழுவின் தலைவர் குலாம்நபி ஆசாத் திடீரென தமது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார்.
உ.பி, உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இந்த தேர்தல் தோல்விகளுக்கு சோனியா காந்தி குடும்பம்தான் காரணம் என விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கூடி விவாதித்தது. இந்த கூட்டத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா மூவரும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். ஆனால் செயற்குழு உறுப்பினர்கள் இதனை ஏற்கவில்லை. இதனால் சோனியா காந்தியே இடைக்கால தலைவராக இருந்து வருகிறார்.

கபில் சிபலுக்கு எதிர்ப்பு
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமைப் பதவியை சோனியா காந்தி விட்டுத்தர வேண்டும் என்றார் அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல். இதற்கு மற்றொரு மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காங்கிர அதிருப்தி தலைவர்கள் டெல்லியில் மூன்று முறை கூடி ஆலோசனை நடத்தினர்.

சோனியாவுடன் சந்திப்பு
இதனிடையே காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை இன்று குலாம்நபி ஆசாத் திடீரென சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இது வழக்கமான ஒரு சந்திப்புதான். உங்களுக்குதான் இது செய்தியாக தெரிகிறது. நாங்கள் எப்போதும் போல சந்தித்து ஆலோசனை நடத்தினோம்.

பதவி விலகத் தேவை இல்லை
இந்த ஆலோசனையின் போது எதிர்வரும் தேர்தல்களை எப்படி ஒற்றுமையாக எதிர்கொள்வது என விவாதித்தோம். காங்கிரஸ் தலைமை பதவியில் மாற்றம் தேவை என்கிற பேச்சே எழவில்லை. சோனியா காந்தியை தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என செயற்குழுவில் யாரும் வலியுறுத்தவும் இல்லை. இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.

ஹூடா-ராகுல் சந்திப்பு
முன்னதாக மற்றொரு அதிருப்தி தலைவர் பூபிந்தர்சிங் ஹூடா, ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது அதிருப்தி தலைவர்கள் யாரும் கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றார். பின்னர் குலாம் நபி ஆசாத்தை ஹூடா சந்தித்து விவாதித்தார். மேலும் குலாம்நபி ஆசாத்தை நேரில் சந்திப்பதற்கு முன்னர் சோனியா காந்தியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உட்கட்சி பிரச்சனை குறித்து விவாதித்திருந்தார்.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
கிளைமேட்டே டக்னு மாறிடுச்சே.. சோனியா, அமித் ஷா யாரையுமே விஜய் சந்திக்கல.. இதுதான் விஷயமா? -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications