டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டில் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை... மத்திய அரசு பதில்.. டெல்லி அரசை கண்டித்த உச்ச நீதிமன்றம்

Google Oneindia Tamil News

டெல்லி; இன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து உச்சநீதிமன்றத்தில் நடந்த பொதுநல வழக்கு விசாரணையின் போது அறிக்கை சமர்பித்த மத்திய அரசு , நாட்டில் தேவைகளைப் பூர்த்தி செய்ய "போதுமான அளவு ஆக்ஸிஜன் உள்ளது, எனவே பீதி அடையத் தேவையில்லை என்று விளக்கம் அளித்தது.

டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் நாட்டின் பிற நகரங்களுக்கு மிக அவசரமாக ஆக்ஸிஜன் அனுப்ப வேண்டும். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லி, ஹரியானாவில் இறப்புகள் அதிகமாக உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக ஆக்ஸிஜன், மருந்து வழங்கல் மற்றும் தடுப்பூசி கொள்கை தொடர்பான் பிரச்னைகள் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

அந்த விளக்கத்தில் "நாட்டில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை. போதுமான ஆக்ஸிஜன் உள்ளது. அத்துடன் COVID-19 நிவாரணத்திற்காக வழங்கலும் அதிகரிக்கப்படுகிறது," என்று மத்திய அரசு சுட்டிக்காட்டியது.

ரெம்டெசிவிர் மருந்து... அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை தேவை... வேல்முருகன் வேண்டுகோள்..!ரெம்டெசிவிர் மருந்து... அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை தேவை... வேல்முருகன் வேண்டுகோள்..!

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

மத்திய அரசின் விளக்கத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், டெல்லி மாநில அரசு, ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீர்க்க மத்திய அரசுடன் பேச வேண்டும். அத்தியாவசிய COVID-19 மருத்துவ பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் பெறுவதில் மத்திய அரசுடன் டெல்லி அரசு ஒத்துழைப்பு மனப்பான்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

நெருக்கடியான நிலை

நெருக்கடியான நிலை

"தயவுசெய்து நெருக்கடியான இந்த நிலையின் போது கூட்டுறவு அணுகுமுறையை பின்பற்றுங்கள். அரசியல் என்பது தேர்தலின் போது செய்ய வேண்டியது, ​​தற்போதைய சூழ்நிலையில் அல்ல" என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

குறைகளை சொல்லலாம்

குறைகளை சொல்லலாம்

"குடிமக்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் தங்கள் குறைகளைத் தெரிவித்தால், அது தவறான தகவல் என்று சொல்ல முடியாது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்." என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

மருத்துவ திறன்

மருத்துவ திறன்

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு ட்வீட் செய்துள்ளார், அவர் மோசமான கோவிட் -19 நிலைமை குறித்து ஆய்வு செய்ததாகவும், நாடு முழுவதும் பற்றாக்குறையின் தீவிரத்தை போக்க "மாநிலங்களுடன் ஒருங்கிணைப்பு மற்றும் மருத்துவ திறன்களை அதிகரிப்பது" போன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாகவும் கூறியுள்ளார்.

English summary
Submitting during a suo motu hearing in the Supreme Court on Friday, the Centre claimed that there there is "more than adequate stock of oxygen" to meet the requirements in the country and that "there is no need to panic". "There is no shortage of medical oxygen in the country, supply being augmented for COVID-19 relief," the Centre was quoted as saying/
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X