10 வருஷமாக வலிமையான எதிர்க்கட்சியே இல்லை.. இதை நினைத்து எனக்கு கஷ்டமாக உள்ளது- மோடி
டெல்லி: ஜனநாயகத்தில் வலுவான எதிர்க்கட்சி இருப்பது அவசியம் என்று கூறிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளாக வலுவான எதிர்க்கட்சியே இல்லை என்றும், இதை நினைக்கும் போது கஷ்டமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல் 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 6 ஆம் கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. இன்னும் ஒரு கட்ட தேர்தல் மட்டுமே பாக்கி உள்ளது. இதையடுத்து வரும் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

லோக்சபா தேர்தல் கடைசி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளாக வலுவான எதிர்க்கட்சியே இல்லை என்றும், இது தனக்கு கஷ்டமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். பிரதமர் மோடி கூறியதாவது:-
ஜனநாயகத்தில் வலுவான எதிர்க்கட்சி இருப்பது அவசியம். அதுவும் ஒரு அரசாங்கம் சிறப்பாக நடைபெற வலுவான எதிர்க்கட்சி மிகவும் அவசியம். நாட்டில் திறமைக்கு பஞ்சம் இல்லை. எனவே அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். 2014 முதல் 2024 வரை வலுவான எதிர்க்கட்சி கிடைக்க வேண்டும் என்றும் நினைத்தேன். ஆனால் வலுவான எதிர்க்கட்சி இல்லை என்று நினைக்கும் போது கஷ்டமாக இருக்கிறது.
என் வாழ்க்கையில் ஒரு விஷயம் கிடைக்கவில்லை என்று இருந்தால் அது ஒரு வலுவான எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும். காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளால அரசை நடத்தியுள்ளது. எனவே, அவர்களிடம் இருந்து நல்ல ஆலோசனைகளை பெறலாம் என நினைத்தேன். ஆனால், காங்கிரசிடம் இருந்து தனக்கு சாதகமான எந்த ஒரு பங்களிப்பும் கிடைக்கவில்லை.
பிரணாப் முகர்ஜி இருந்தவரை, எனக்கு பயனுள்ளதாக இருந்தது. தனது அனுபவங்களை பிரணாப் முகர்ஜி என்னிடம் பகிர்ந்தார். ஆனால், எதிர்க்கட்சிகளிடம் இருந்து எந்த பயனும் கிடைக்கவில்லை. எனது கட்சியினர் மற்றும் குஜராத்தில் முதல்வராக கிடைத்த அனுபவத்தை வைத்தே அரசாங்கத்தை நடத்தி வருகிறேன்.
குஜராத்தில் நான் முதல்வராக இருந்த போது நல்ல எதிர்க்கட்சி இருந்தது. ஆனால் இப்போது இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக என்னை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. சில செய்தித்தாளின் அட்டைப்படத்தில் கூட நான் பேய் என்று விமர்சிக்கப்பட்டேன். ஆனால் என்றைக்கும் நான் அமைதியையும், பொறுமையையும் இழக்கவில்லை.
பொது வெளியில் பேசும்போது கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். ஒருவரை விமர்சிக்க வேண்டும் என்றால், நல்ல வார்த்தையில் நாகரிகாம விமர்சிக்க வேண்டும். ஆனால் இந்தியா கூட்டணியில் அப்படி இல்லை.
அரசியலுக்காக எதிர்க்கட்சியை நான் எதிர்த்திருந்தாலும், நாட்டுடைய நலனிற்காக சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு அவர்களை எதிர்பார்த்து இருந்தேன். இந்தியா போன்ற வலுவான ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சியும் பலம் வாய்ந்ததாகவும், விழிப்புணர்வும் உள்ளதாகவும் இருந்தால் அனைவருக்கும் நன்மை பயக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications