நாடாளுமன்றத்தில் ஜெய்ஹிந்த் - வந்தே மாதரம் கூற தடை.. எம்பிக்களுக்கு முக்கிய அட்வைஸ்.. ஏன் தெரியுமா?
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் தான் சபாநாயகர் உத்தரவை நாடாளுமன்றத்துக்கு உள்ளே அல்லது வெளியே நேரடியாகவோ, மறைமுகமாகவோ விமர்சிக்க கூடாது. வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் கோஷங்களை எழுப்பக்கூடாது என எம்பிக்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கி நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

இதற்கான பட்ஜெட் உரை தயாரிக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. மோடி 3வது முறையாக பிரதமராகி உள்ள நிலையில் முதல் பட்ஜெட் இதுவாகும். இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாளை தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பது ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. நாளை மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதன் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு கோரி டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது நாளை தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து நாடாளுமன்றத்தின் ராஜ்யசபா செயலகம் சார்பில் எம்பிக்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது நாடாளுமன்ற ராஜ்யசபா எம்பிக்களுக்கான ஹேண்ட் புக்கில் இருந்து சில முக்கிய விஷயங்களை குறிப்பிட்டு இந்த அறிவுரை என்பது வழங்கப்பட்டுள்ளது.
அதில் நாடாளுமன்றத்துக்குள் அல்லது நாடாளுமன்றத்துக்கு வெளியே சபாநாயகர் உத்தரவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ விமர்சிக்க கூடாது. நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு அனைத்து எம்பிக்களும் வணக்கம் தெரிவிக்க வேண்டும். நாடாளுமன்றத்துக்குள் அல்லது நாடாளுமன்ற வளாகத்துக்குள் எம்பிக்கள் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என்ற வார்த்தைகளை பயன்படுத்த கூடாது. மேலும் குறிப்பிட்ட நபரின் பெயரை கூறி நன்றி நன்றி என்பது உள்ளிட்ட முழங்கங்களை சபையில் எழுப்பபக்கூடாது. அதோடு சபை மாண்பை குறைக்கும் வகையிலான வார்த்தை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக சபை மாண்பை மற்றும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகளை சொன்னால் உடனடியாக அதனை பேசியவர்களை வாபஸ் பெற வேண்டும். அதுமட்டுமின்றி குறிப்பிட்ட உறுப்பினர்கள் ஒருவரை விமர்சித்து பேசி கேள்வி எழுப்பும்போது சம்பந்தப்பட்ட அந்த நபர் பதிலளிக்கும்போது கேள்வி எழுப்பியவர் சபையில் இருக்க வேண்டும். அப்படி சபையில் இல்லாமல் போவது என்பது நாடாளுமன்ற நெறிமுறைகளை மீறுவதாகும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த முதல் முதல் முறையாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பது நடந்தது. இந்த கூட்டத்தொடரில் நீட் விலக்கு, நீட் முறைகேடு, மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க கூறினர். பிரதமர் மோடி மற்றும் துறை சார்ந்த அமைச்சர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த சமயத்தில் ராஜ்யசபா, லோக்சபாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்க்கட்சிகளுடன் கருத்து மோதலில் ஏற்பட்டன.
இந்த வேளையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் மீதும் நேரடியாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்நிலையில் தான் தற்போது ராஜ்யசபா செயலகம் சார்பில் எம்பிக்களுக்கு சில முக்கிய அட்வைஸ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications