"அந்த மாதிரி வீடியோ அனுப்பினதுக்கு டிஜிட்டல் அரெஸ்ட் பண்றோம்.." டாக்டரை ஏமாற்றி பணம் பறித்த கும்பல்
டெல்லி: நொய்டாவைச் சேர்ந்த பெண் மருத்துவரை ஆபாச வீடியோ அனுப்பிய குற்றத்துக்காக டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என மிரட்டி மர்ம கும்பல் ரூ.59 லட்சம் பணம் பறித்துள்ளது.
சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்தாலும், டிஸைன் டிஸைனான திட்டங்களுடன் இறங்கி மோசடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நொய்டாவைச் சேர்ந்த பூஜா கோயல் என்ற 40 வயது பெண் மருத்துவருக்கு கடந்த 13ம் தேதி செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிரில் பேசிய அந்த நபர், தான் ட்ராய் அதிகாரி (இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை குழுமம்) பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "உங்கள் செல்போனில் இருந்து ஆபாச வீடியோக்கள் பரப்பப்பட்டுள்ளன." என்று சொல்லி பதற வைத்துள்ளார். பூஜாவோ இதை மறுத்துள்ளார். ஆனால் எதிரில் பேசிய நபர் வீடியோ காலில் வர வைத்து பிளாக்மெயில் செய்துள்ளார். வீடியோ காலில் பூஜாவை பயங்கரமாக மிரட்டிய அந்த நபர், "உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம்" என்று பயமுறுத்தியுள்ளார். மேலும், "நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் வேண்டும்." என்று மிரட்டியுள்ளார். இப்படி அவரை கைது செய்துள்ளோம் என இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக டார்ச்சர் செய்துள்ளனர்.
48 மணி நேரமாக தொடர் மிரட்டல்கள் வந்ததால், மருத்துவர் பூஜா கோயல் வேறு வழியில்லாமல் அவர்கள் சொன்ன வங்கிக் கணக்குக்கு ரூ.59 லட்சத்தை டிரான்ஸ்ஃபர் செய்துள்ளார். அதன்பிறகு தான் இது மோசடி என்பதை உணர்ந்துள்ளார். இதையடுத்து, கடந்த 22ம் தேதி நொய்டா சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் உதவி ஆணையர் விவேக் ரஞ்சன் ராய், "பூஜா பணம் அனுப்பிய வங்கிக் கணக்கு குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுப்போம்." என்று கூறியுள்ளார்.
சமீபகாலமாக 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்கிற நூதன மோசடி அதிகரித்து வருகிறது. மக்களை பயமுறுத்த மோசடியாளர்கள் இந்த முறையை அதிகம் கையாள்கின்றனர். மக்களை நம்ப வைக்க மோசடி கும்பல் வீடியோ காலில் வந்து அரசு அலுவலகம், சீருடை போன்ற தோற்றத்தை செட் செய்து மிரட்டுகிறார்கள். இதேபோல டெல்லியைச் சேர்ந்த 72 வயது பெண்ணிடம், உங்கள் செல்போன் கிரிமினல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மிரட்டி ரூ.82 லட்சம் பறித்துள்ளனர்.
இதுதொடர்பாக நொய்டா காவல்துறை பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடந்த சில மாதங்களில் இப்படி 10க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்கள் நடந்துள்ளன. அந்த மோசடிகள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். பொதுமக்களுக்கு இதுபோல சட்டரீதியான விவகாரங்களை சொல்லி மிரட்டி பணம் கேட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திலோ அல்லது சைபர் கிரைமிலோ புகாரளிக்க வேண்டும்." என்று கூறியுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications