டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனர் முக சாயல்.. வடகிழக்கு இந்தியர்களையே கொரோனாவை போல் துரத்தியடிக்கும் இனப்பாகுபாடு அதிகரிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: சீனர்களைப் போல முகச் சாயல் இருப்பதால் வடகிழக்கு இந்தியர்களை கொரோனாவின் பெயரால் துரத்தியடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Recommended Video

    கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது சீனா

    நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் படுதீவிரமாக இருந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து நாட்டின் பெரும்பான்மை மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

    North East Students fear over Corona racial attack

    மாநிலங்கள் சீல் வைக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தனை துயரம் தோய்ந்த நேரத்தில் வடகிழக்கு இந்தியர்கள் இனப்பாகுபாட்டால் பெரும் அவமானப்படுத்தப்படுகிற நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

    குஜராத்தில் மணிப்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கொரோனா என கூச்சலிட்டு இளைஞர்கள் சிலர் அவமதித்துள்ளனர். அவர்களிடம் தாம் மணிப்பூரை சேர்ந்தவர் என்றும் அதுவும் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும் கூறியும் குஜராத்திகளால் புரிந்து கொள்ளப்படவில்லை. இதேபோல் சென்னையிலும் சில சம்பவங்கள் நடைபெற்றதாக போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

    உடலின் எதிர்ப்பு சக்தியை 'ஏமாற்றி' வெல்லும் கொரோனா வைரஸ்-செல்களுக்குள் நடக்கும் உயிர் போராட்டம்!உடலின் எதிர்ப்பு சக்தியை 'ஏமாற்றி' வெல்லும் கொரோனா வைரஸ்-செல்களுக்குள் நடக்கும் உயிர் போராட்டம்!

    ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லியில் இதேபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மணிப்பூரை சேர்ந்த இளம்பெண்ணை பார்த்து கொரோனா என ஒருவர் கூச்சலிட்டுள்ளார். அத்துடன் அந்த இளம்பெண்ணின் உடையில் பான்பராக்கை உமிழ்ந்திருக்கிறார். இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகமும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

    English summary
    North East Students are fearing over the racial attack in the name of Corona.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X