டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செப்டம்பரில் வருது அமெரிக்காவின் கோவோவாக்ஸ் தடுப்பூசி.. 100% பாதுகாப்பானது.. விரைவில் இந்தியாவில்!

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்காவின் பயோடெக்னாலஜி நிறுவனமான நோவாவாக்ஸினின் கோவோவாக்ஸ் எனும் தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் மிக்கது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அது போல் கொரோனாவிலிருந்து பாதுகாப்பதில் 100 சதவீதம் செயல்திறன் மிக்கது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் நடைமுறையில் உள்ளது. அவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. எனினும் தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளதால் வெளிநாட்டு நிறுவனங்களின் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்குமாறு மத்திய அரசு சீரம் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

Novavax vaccine Covovax could be available in India soon

இதையடுத்து அமெரிக்காவின் நோவாவாக்ஸின் நிறுவனத்தின் கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கான சோதனை இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த தடுப்பூசி மார்க்கெட்டுகளில் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த கோவோவாக்ஸ் தடுப்பூசி மற்ற தடுப்பூசிகளில் இருந்து எவ்வாறு மாறுபட்டவை என்பதும் விளக்கப்பட்டுள்ளது. கோவோவாக்ஸ் தடுப்பூசி ஸ்பைக் புரதத்தை தொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸை போன்றே தோற்றமளிக்கிறது.

Recommended Video

    Covaxin vs Covishield vs Sputnik வித்தியாசம் என்ன ? Best Corona vaccine எது?

    தடுப்பூசியில் உள்ள இந்த புரதமானது கொரோனா வைரஸை போன்ற மட்டுப்படுத்தப்பட்ட வைரஸை எதிர்த்து கடுமையாக போராடி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆல்பா, பீட்டா ஆகிய உருமாறிய வைரஸ்களுக்கு மத்தியில் இந்த வைரஸ் ஒரே நேரத்தில் 3 பரிசோதனை கூட சோதனைகளை முடித்துவிட்டது.

    இது கொரோனா வைரஸை எதிர்த்து 90 சதவீதம் செயல்திறன் உள்ளது. கொரோனா வைரஸிலிருந்து 100 சதவீதம் நம்மை காக்கிறது. இது விரைவில் இந்தியாவில் கிடைக்கவுள்ளது.

    English summary
    US based biotechnology company Novavax's coronavirus vaccine could be available in India Soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X