மக்கள்தொகை வெப்சைட்டிலிருந்து தேசிய மக்கள்தொகை பதிவு ஆவணத்துக்கான படிவம் திடீர் நீக்கம்
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய பதிவாளர் ஜெனரல் இணையதளத்திலிருந்து, தேசிய மக்கள் தொகை பதிவு ஆவணத்துக்கான படிவம் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி இந்த படிவம் இணையதளத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கேட்டின் ஒரு பகுதியாக இந்த படிவத்தை இணைத்திருந்தனர். இது அனைத்து மாநிலஅரசுகளுக்கும், மாவட்ட முதன்மை சென்சஸ் அதிகாரிகளுக்கும், அதுதொடர்பான பொறுப்பு அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த படிவத்தில் தாய்மொழி, தந்தை தாய் பிறந்த இடம், கடைசியாக வசித்த இடம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய கேள்விகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து படிவத்தை சென்சஸ் இந்தியா நிறுவனம் நீக்கி விட்டது.
இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இன்னும் இந்த படிவும் இறுதி செய்யப்படவில்லை. புதிய படிவம் இணைக்கப்படும் தேதியும் முடிவு செய்யப்படவில்லை என்றார்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு 2010ம் ஆண்டு தொகுக்கப்பட்டு, 2015ம் தேதி அப்டேட் செய்யப்பட்டது. ஆனால் செப்டம்பர், 2019ம் ஆண்டு இந்த படிவத்தில் புதிதாக பல கேள்விகள் இணைக்கப்பட்டன. இதற்கு சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து தற்போது censusindia.gov.in என்ற இணையதளத்தில் இருந்து படிவம் நீக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் 119 கோடி இந்தியர்களின் தகவல்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டத்தின்போது தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. ஆனால் கொரோனா காரணமாக இது காலவரையின்றி தள்ளி போடப்பட்டது. புதிய தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த சட்டம் அமலான பிறகு தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
2021ம் ஆண்டுக்கான தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் (என்.பி.ஆர்) உங்கள் பெயரை சேர்க்க ஆதார், ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 21 அடையாளங்களில் ஏதேனும் ஒன்றை குடும்ப தலைவர் காட்ட வேண்டியதிருக்கும் என அரசு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications