டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மதத்தின் பெயரால் நாட்டை சீர்குலைக்க சிலர் முயல்கின்றனர்!"தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பரபர

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டை சிலர் சீர்குலைக்க முயல்வதாகத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறி உள்ளக் கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக உள்ளவர் அஜித் தோவல். இவர் இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது நாட்டின் இறையாண்மை குலைக்கச் சிலர் முயல்வதாகக் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி விரட்டி அடிச்சிட்டீங்களே.. தமிழகத்துக்கு இழப்பு.. குடும்ப நலனில் தான் குறி - ஈபிஎஸ் அட்டாக்! இப்படி விரட்டி அடிச்சிட்டீங்களே.. தமிழகத்துக்கு இழப்பு.. குடும்ப நலனில் தான் குறி - ஈபிஎஸ் அட்டாக்!

 அஜித் தோவல்

அஜித் தோவல்

தலைநகர் டெல்லியில் அகில இந்திய சூஃபி சஜ்ஜதனாஷின் கவுன்சில் சார்பில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அங்குப் பேசிய அஜித் தோவல், சிலர் மதத்தின் பெயரால் நாட்டை சீர்குலைக்க முயல்வதாகப் பரபர கருத்தைத் தெரிவித்து உள்ளார்.

 டெல்லி கூட்டம்

டெல்லி கூட்டம்

சஜ்ஜதனாஷின் கவுன்சில் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நாட்டின் அமைதி மற்றும் ஒற்றுமையை நிலைநாட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். இந்தக் கூட்டத்தில் அஜித் தோவல் பேசும் போது தான், இந்த கருத்துகளை அவர் குறிப்பிட்டார்.

 சீர்குலைக்க முயற்சி

சீர்குலைக்க முயற்சி

டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அஜித் தோவல், "இந்தியாவின் வளர்ச்சியைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக மோசமான ஒரு சூழலை உருவாக்க சில தீய சக்திகள் முயல்கின்றன. இந்தத் தீய சக்திகள் மதம் மற்றும் சித்தாந்தத்தின் பெயரால் நாட்டை சீர்குலைக்கவும் இங்கு மோதலை ஏற்படுத்தவும் முயல்கின்றனர். இது ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கிறது. இது நாட்டிற்கு வெளியேயும் கூட பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.

 நபிகள் நாயகம்

நபிகள் நாயகம்

சில மாதங்களுக்கு முன்பு பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து சில சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார். இதற்கு வெளிநாடுகளில் இருந்தும் கடும் கண்டனம் வந்து இருந்தது. அப்போதே மத்திய அரசு இது போன்ற கருத்துக்களைப் பொறுத்துக்கொள்ளாது என்று கூறி இருந்தது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் டெய்லர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அங்குப் பதற்றமான நிலை ஏற்பட்டது. இந்தச் சூழலில் தான், அஜித் தோவல் இந்த முக்கிய கருத்தைக் கூறி உள்ளார்.

English summary
Ajit Doval says Some Creating Conflict In Name Of Religion: (டெல்லி நிகழ்ச்சியில் பேசிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்) NSA Ajit Doval latest speech in delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X