சி.பி.ஐ. பிடியில் சிக்கிய சித்ரா ராமகிருஷ்ணன்...அவிழ்க்கப்படுமா இமயமலை சாமியார் யார்? என்கிற மர்மம்?
டெல்லி: தேசிய பங்கு சந்தையான என்.எஸ்.இ யின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் மீதான ஏராளமான முறைகேடு புகார்களால் சி.பி.ஐ.அவரை நேற்று கைது செய்தது. இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணன் இடைவிடாமல் கூறிவரும் இமயமலை சாமியார் யார் என்பது குறித்த மர்மமும் அவிழக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்.எஸ்.இ. சித்ரா மீது நீண்டகாலமாகவே பல்வேறு ஊழல் முறைகேடுகள் கூறப்பட்டன. இது தொடர்பாக பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி விசாரணை நடத்தி அபராதங்கள், தடைகளை சித்ராவுக்கு விதித்தன.
இந்த விசாரணைகளின் போது என்.எஸ்.இ. தொடர்பான ஒவ்வொரு நகர்வுகள், நடவடிக்கைகளை மர்ம சாமியார் ஒருவருக்கு சித்ரா ராமகிருஷ்ணன் அனுப்பி வைத்திருந்தது அம்பலமானது. மேலும் அந்த சாமியார்தான் நாட்டின் தேசிய பங்கு சந்தையையே தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது எனவும் தெரியவந்தது. ஆனால் அந்த சாமியார் குறித்த விவரங்களை சித்ரா ராமகிருஷ்ணன் தெரிவிக்கவில்லை. அவர் இமயமலை சார்ந்தவர் என்று மட்டும் சித்ரா கூறி வந்தார்.

அதிரடி நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து சித்ரா மீதான வழக்கு அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தது. சித்ரா ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. சிபிஐ, அமலாக்கப் பிரிவுகள் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை முடுக்கிவிட்டன. சித்ரா வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது.

யார் அந்த சாமியார்?
மேலும் சித்ரா ராமகிருஷ்ணனை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைகளின் போதும் சித்ராவிடம் இருந்து மழுப்பலான மூடி மறைக்கப்பட்ட தகவல்கள் பெற முடிந்தது. மேலும் சித்ராவால் என்.ஐ.இ-க்குள் கொண்டுவரப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியன் தான் மர்ம சாமியாரா? என்கிற சந்தேகத்தையும் சிபிஐ அதிகாரிகள் முன்வைத்திருந்தனர்.

ஹர்ஷத் மேத்தாக்கள்
அத்துடன் என்.எஸ்.இ தொடர்பான பல்வேறு தகவல்களை சில நிறுவனங்கள் முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு சித்ரா ராமகிருஷ்ணன் முறைகேடுகளில் ஈடுபட்டு பெரும் பணம் பெற்றிருப்பதாகவும் சிபிஐ அதிகாரிகள் கண்டறிந்தனர். நாட்டில் பங்கு சந்தைகளையே அலறவிட்ட ஹர்ஷத் மேத்தாக்களை விஞ்சிடும் வகையில் சித்ரா ராமகிருஷ்ணனின் மோசடிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மர்மங்கள் விலகும்?
இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணனை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக நேற்று இரவு கைது செய்தனர். இப்போது சிபிஐ கஸ்டடியில் இருக்கும் சித்ரா ராமகிருஷ்ணன், சர்ச்சைக்குரிய இமயமலை மர்ம சாமியார் குறித்த தகவல்களை இனியேனும் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடும் என்கின்றன சிபிஐ வட்டாரங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications