Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் விமான பயணம்.. டிஜிசிஏ வெளியிட்ட ஆச்சரியமான தகவல்... வேறலெவல் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத கடந்த 2023ம் ஆண்டு 15.2 கோடி ஆக அதிகரித்துள்ளதாக விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக விமானங்களில் பயணிக்க மக்கள் அதிக அளவு ஆர்வம் காட்டுகிறார்கள். அதன் காரணமாக விமானங்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிக அளவு உயந்துள்ளது.

விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் (டிஜிசிஏ) கடந்த பொங்கல் அன்று வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி, கடந்த 2023-ம் ஆண்டில் உள்நாட்டில் உள்ள நகரங்களுக்கு விமானத்தில் பயணித்தோர் எண்ணிக்கை 15.2 கோடி ஆக அதிகரித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை எப்படி என்றால், இது இதுவரை இல்லாத அதிகபட்ச வருடாந்திர எண்ணிக்கையாக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு முன்பு 2019-ம் ஆண்டு உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 14.4 கோடி ஆக இருந்தது.

Number of domestic air passengers has increased to an unprecedented 15.2 crore in 2023 : DGCA

இந்நிலையில் கடந்த 2020-ல் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விமான சேவை, 2020ம் ஆண்டு 2 மாதங்களுக்கு முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் விமான பயணத்திற்கும் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதனால் 2020ம் ஆண்டில் விமான பயணிகள் எண்ணிக்கை 6.3 கோடியாக குறைந்தது. பின்னர் 2021-ம் ஆண்டிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது.

இதனால் விமான பயணிகளின் எண்ணிக்கை 8.4 கோடியாக இருந்தது. ஆனால் கொரோனா 3வது அலை பெரிய பாதிப்பு இல்லாததால், 2022-ல் 12.3 கோடி ஆக உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இயல்பு நிலை 2022ம் ஆண்டுதிரும்பிய போதும் 2023ம் ஆண்டில் தான் வழக்கமான விமான சேவைகள் நடைபெற தொடங்கியது. 2023ம் ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில் உள்நாட்டில் உள்ள நகரங்களுக்கு விமானத்தில் பயணித்தோர் எண்ணிக்கை 15.2 கோடி ஆக அதிகரித்திருக்கிறது.

கடந்த 2023-ல் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 60.5 சதவீதத்துடன் இண்டிகோ முதலிடம் பிடித்திருப்பது விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. ஏர் இந்தியா 9.7% பயணிகள் , விஸ்தாரா 9.1% பயணிகள், 3 ஏஐஎக்ஸ் கனெக்ட் 7.2% பயணிகள் என 3 நிறுவனங்களை உள்ளடக்கிய டாடா குழுமம் 26 சதவீதத்துடன் 2-ம் இடம் பிடித்திருக்கிறது. கடந்த 2023-ல் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் ஸ்பைஸ்ஜெட் 5.5%, ஆகாசா ஏர் 4.1%, பிற நிறுவனங்கள் 3.9% பங்கு வகித்திருப்பது டிஜிசிஏ வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.

குறைந்த விலையில் விமான டிக்கெட் புக்கிங் எப்படி: பொதுவாக விமானத்தில் பயணிக்க விரும்பும் பலரும் விரும்புவார்கள். உண்மையில் இந்தியாவிற்குள் மட்டுமல்ல.. இந்தியாவில் இருந்து உலகின் எந்த நகரத்திற்கும் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும். எப்படி என்பதை பாரப்போம்.

குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட் புக் செய்வதற்கு skyscanner app என்ற ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யுங்கள்.அதில் போய் பிளைட் பகுதியில் நகரத்தின் கட்டத்தில் இந்தியா என்று டைப் செய்யுங்கள். கீழே everywhere (எங்கு வேண்டுமானாலும்) என டைப் செய்யுங்கள்.

நேரம், நாள் என எதையும் குறிப்பிட வேண்டாம். அப்படி செய்தால் இந்தியாவில் மிககுறைவான கட்டணத்தில் எந்தெந்த வழித்தடத்தில் விமானங்கள் உள்ளன என்பதை இந்தியா என்று உங்களுக்கு காட்டும். இந்தியாவை கிளிக் செய்தால், அதில் எந்தெந்த நகரங்களுக்கு இடையே எந்த நாளில் குறைவான கட்டணம் என்பதை காட்டும். வெளிநாடு என்றால் வெளியிலேயே குறைவான கட்டணங்களை காட்டும். இந்தியாவிற்கு 500, 1000 , 2000, 3000 என விரும்பிய நகரங்களுக்கு குறைந்த கட்டணம் காட்டும். இதை பார்த்துவிட்டு அப்படியே புக்கிங் செய்ய தேவையில்லை..

நேரடியாக எந்த விமான நிறுவனமோ அதன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று புக்கிங் செய்தால் கட்டணம் மிக குறைவாகவே இருக்கும். அதேபோல் மதுரை, சென்னை, கோவை, திருச்சி, கோவா, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி, திருவனந்தபுரம் எந்த நகரத்தையும் தேர்வு செய்து கட்டணம் குறைவாக உள்ள நாட்களை தேர்வு செய்து பயணிக்கலாம். உங்கள் கிரிடிட் கார்டுகளுக்கான ஆபர்கள் இருந்தால் அதையும் பயன்படுத்தலாம். விமான டிக்கெட் முன்கூட்டியே புக்கிங் செய்தால் தான் குறைவாக இருக்கும். கடைசி நேரத்தில் புக்கிங் செய்தால், மிக அதிகமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+