"பணம் தரோம்.." சிறுவனை காப்பாற்ற டிரைவரை பலிகடா ஆக்கும் தொழிலதிபர் குடும்பம்! புனே விபத்தில் பகீர்
டெல்லி: புனே கார் விபத்தில் டிரைவர் காரை ஓட்டியதாகத் தகவல்கள் வெளியாகும் நிலையில், இது 100% பொய் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த வாரம் புனேவில் நடந்த போர்ஷே கார் விபத்து நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிபோதையில் காரை ஓட்டி சென்ற புனே தொழிலதிபரின் மகன் பைக் மீது மோதியுள்ளான்.

இதில் பைக்கில் பயணித்த தம்பதி அப்படியே தூக்கி வீசப்பட்டுள்ளனர். இந்த கொடூர விபத்தில் அந்த தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
போர்ஷே கார் விபத்து: இதற்கிடையே புனே போர்ஷே கார் விபத்து தொடர்பாக புனே போலீசார் சில பகீர் தகவல்களைத் தெரிவித்துள்ளனர். அதாவது காரை அதிவேகமாக ஓட்டிச் சென்ற 17 வயது சிறுவனுக்குப் பதிலாக டிரைவர் தான் அந்த காரை ஓட்டியது போலக் காட்ட முயற்சிகள் நடப்பதாக புனே காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்தார். இந்த விபத்தால் சிறுவனுக்குப் பிரச்சினை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக விபத்து நடந்த உடனேயே டிரைவர் தான் காரை இயக்கினார் என்பது போலக் காட்ட முயற்சிகள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தனர்..
"போர்ஷே காரை ஓட்டியது சிறுவன் இல்லை,டிரைவர் தான்.."புனே கார் விபத்து! தொழிலதிபர் தரப்பு அந்தர் பல்டி
போலீசார்: இது தொடர்பாக அமிதேஷ் குமார் மேலும் கூறுகையில், "விசாரணையின் போது நான்தான் காரை ஓட்டினேன் என்று அந்த டிரைவர் கூறியது உண்மைதான். இது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்.. யாருடைய அழுத்தத்தின் பேரில் டிரைவர் அப்படிச் சொன்னார் என்பதையும் நாங்கள் விசாரிக்கிறோம். அப்போது டிரைவரை மாற்றவும் முயற்சி நடந்ததாகத் தெரிகிறது.. இது குறித்தும் விசாரித்து வருகிறோம்
காரை அந்த டிரைவர் ஓட்டியதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை.. 17 வயது சிறுவன் தான் சொகுசு காரை ஓட்டியுள்ளார்.. இதற்கான சிசிடிவி காட்சிகள் எங்களிடம் உள்ளது. அதேபோல சிறுவன் பப்பில் மது அருந்துவது போன்ற சிசிடிவி காட்சிகள் எங்களிடம் உள்ளன. இதை ஏன் சொல்கிறேன் என்றால்.. சிறுவன் தான் விபத்தை ஏற்படுத்தி இருக்கிறான் என்பதை நிரூபிக்கப் பல ஆதாரங்கள் உள்ளன. சிறுவன் முழு சுயநினைவில் தான் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
தெரிந்தே விபத்து: என்ன செய்கிறோம் என்பதைக் கூட உணர முடியாத அளவுக்கு எல்லாம் அவர்கள் மதுபோதையில் இல்லை. சுற்றி என்ன நடக்கிறது என்பது தெளிவாகப் புரியும் வகையிலேயே அவர்கள் இருந்துள்ளனர்" என்றார். மேலும், விபத்து நடந்த கொஞ்ச நேரத்திலேயே சிறுவனைக் காப்பாற்ற விபத்தை டிரைவரை பழி ஏற்றுக் கொள்ளும்படி சிறுவனின் பெற்றோர் கேட்டுள்ளனர். இதற்குப் பணம் கொடுப்பதாகவும் அவர்கள் கூறியதாகத் தெரிகிறது.
என்ன நடந்தது: பிளஸ் 2 முடிவுகளை வெளியான நிலையில், அதைக் கொண்டாட புனேயில் உள்ள இரண்டு பப்களில் அந்த 17 வயது சிறுவன் மது குடித்துள்ளான். பிறகு அதிவேகத்தில் தனது காரை ஓட்டி சென்ற அந்த இளைஞர், பைக்கில் மோதியுள்ளான். இதில் பைக்கை ஓட்டிய அனீஷ் அவதியா (24) அப்படியே கீழே விழுந்துள்ளான்.. பின்னால் இருந்த அஷ்வினி கோஷ்டா (25) 20 அடி உயரத்தில் தூக்கி வீசப்பட்டார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications