ஹிஜாப் விவகாரம் : ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பு.. உமர் அப்துல்லா,மெகாபூபா முஃப்தி கருத்து..!
டெல்லி : ஹிஜாப் குறித்து கர்நாடக ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர்வளான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள உடுப்பி, சிவமோகா, சிக்மக்ளூர், மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர திடீர் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு கல்வி நிறுவனங்களுக்குள் முஸ்லீம் மாணவிகள் வந்தால் நாங்களும் காவி துண்டு அணிவோம் என கூறி இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் உரிமைகளுக்காக முஸ்லீம் மாணவிகள் பள்ளி வாயிலில் அமர்ந்து போராடி வருகிறார்கள்.

ஹிஜாப் விவகாரம்
ஹிஜாப் பிரச்சனை தீவிரமடைந்த வந்த நிலையில் பதற்றத்தைத் தணிக்க பள்ளி கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சில மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் அணிவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு அளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இன்று தீர்ப்பு
இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரித்து ராஜ், கிருஷ்ணா தீக்சித், ஜே.எம் ஹாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினர். அதில், ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்று அல்ல என்றும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என தெரிவித்து ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

உமர் அப்துல்லா கருத்து
இந்நிலையில் ஹிஜாப் குறித்து கர்நாடக ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உமர் அப்துல்லா, ஹிஜாப் என்பது ஒரு ஆடை பற்றியது அல்ல. அது ஒரு பெண் எத்தகைய ஆடையை அணிய விரும்புகிறாள் என்பதை தேர்ந்தெடுக்கும் அப்பெண்ணின் உரிமையை பற்றியது. ஆனால் இந்த அடிப்படை உரிமையை நீதிமன்றம் நிலைநாட்ட தவறியது கேலிக்கூத்து" என பதிவிட்டுள்ளார்.

மெகபூபா முப்தி பதிவு
இதேபோல் ட்விட்டரில் கருத்து கூறியுள்ள மெகபூபா முப்தி, " ஹிஜாப் தடையை உறுதி செய்யும் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முடிவு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒருபுறம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது பற்றி பேசினாலும், எளிய விஷயமான அவர்களது ஆடையை தேர்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் மதத்தைப் பற்றியது மட்டுமல்ல, பெண்களின் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பற்றியது", என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications